வேற்றுக் கிரகவாசிகள் வருகைக்கான எந்த ஆதாரமும் இல்லை - அமெரிக்கா

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வேற்று கிரகவாசிகள் இதுவரை பூமிக்கு வந்ததாக எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வேற்று கிரகவாசிகள் இதுவரை பூமிக்கு வந்ததாக எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வேற்றுக் கிரகவாசிகள் வருகைக்கான எந்த ஆதாரமும் இல்லை - அமெரிக்கா

பென்டகன்

நாம் பூமியில் வாழ்ந்து வருகிறோம். இதேபோல் வேறு ஒரு கிரகமும் இருக்கலாம் என்றும் அங்கும் மனிதர் வாழலாம் என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Advertisment

வானத்தில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் பறப்பதாக (unidentified objects) பலரும் கூறிவந்தனர். இது ஏலியன்களாக இருக்கலாம் எனவும் கூறினர். பறக்கும் தட்டுகள் மூலம் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. கிட்டதிட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாகவே பறக்கும் தட்டுகள் குறித்த மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில், வேற்று கிரகவாசிகள் இதுவரை பூமிக்கு வந்ததாகவும், அது தொடர்பான தகவல் எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்கா ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பென்டகன் வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்துள்ளது. ஆல்-டொமைன் அனோமலி ரெசல்யூஷன் என்ற அழைக்கப்படும் குழுவின் இயக்குனர் சீன் கிர்க்பாட்ரிக், வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கான ஆதாரம் இதுவரை இல்லை. ஆனால் இதுகுறித்து அறிவியல் ஆய்வு இன்னும் தொடர்கிறது என்றார். அறிவியல் தரவுகள், அறிவியல் ஆய்வுகள் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது என்ற கூறினார்.

2004-ம் ஆண்டு முதல் வானில் அடையாளம் தெரியாத பொருட்கள் பறப்பது தொடர்பாக 140 க்கும் மேற்பட்ட வழக்குகள் அரசாங்க அறிக்கையில் ஆவணப்படுத்தப்படுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: