நேச்சர் ஜியோசயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, சீனா மற்றும் இந்தியாவின் சில பகுதிகள் நைட்ரேட் ரேடிக்கல்களின் உற்பத்திக்கான இரவு நேர ஹாட்ஸ்பாட்களாக உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஓசோன் மற்றும் PM2.5 நுண்ணிய துகள்களின் அளவை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. நைட்ரேட் ரேடிக்கல் என்பது நைட்ரஜனின் ஆக்சைடு ஆகும். நைட்ரஜன் அணுவுடன் பிணைக்கப்பட்ட அவை 3 ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நகரங்களில் நைட்ரேட் ரேடிக்கல் இரவு நேர உற்பத்தியில் சரிவை சந்தித்தது. அதேநேரத்தில் சீனா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரையின் இணை ஆசிரியரான சோங்போ ஷியின் கூற்றுப்படி, நைட்ரஜன் ஆக்சைடுகள் ரியாக்டிவ் வாயுக்கள் அது காற்று மாசுபாடுகளை உருவாக்கும் ஓசோன் மற்றும் PM2.5 துகள்களை தூண்டுகின்றன.
நைட்ரேட் ரேடிக்கல்கள் ஆக்ஸிடைசிடு கரிம சேர்மங்கள் (VOCகள்) போன்ற வாயு மாசுபடுத்திகளை ஆக்சிஜனேற்றம் செய்யும், இது ஓசோன் மற்றும் இரண்டாம் நிலை கரிம ஏரோசோலை உருவாக்கும். அதனால் காற்றின் தரம் மோசமடைகிறது. ஓசோன் என்பது மனித ஆரோக்கியத்தையும் பயிர் விளைச்சலையும் பாதிக்கும் ஒரு காற்று மாசுபாடு ஆகும்.
சீனாவில் உள்ள மூன்று மெகாசிட்டி கிளஸ்டர்களில் (வட சீனா, யாங்சே நதி டெல்டா மற்றும் பேர்ல் ரிவர் டெல்டா) ஆகிய பகுதிகளில் நைட்ரேட் ரேடிக்கல்களின் அதிகரித்த உற்பத்தியை ஆய்வு ஆவணப்படுத்துகிறது. இதே நிகழ்வு இந்தியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. வட இந்திய பகுதிகளில் நைட்ரேட் ரேடிக்கல்களின் இரவு நேர உற்பத்தி அதிகரிப்பைக் காண முடிகிறது. இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் காற்றின் தரம் மோசமடையும் என ஷி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/