scorecardresearch

பிஷன் சர்ஃபேஸ் பவர் ப்ராஜெக்ட்.. நிலவில் அணுசக்தியை நிறுவ அமெரிக்காவின் முதல் படி!

பிஷன் சர்ஃபேஸ் பவர் ப்ராஜெக்ட் என்பது, நிலவில் அணுசக்தியை நிறுவுவதற்கான அமெரிக்காவின் முதல் படியாகும்.

பிஷன் சர்ஃபேஸ் பவர் ப்ராஜெக்ட்.. நிலவில் அணுசக்தியை நிறுவ அமெரிக்காவின் முதல் படி!
Nuclear fission surface power system

நாசாவும், அமெரிக்காவின் எரிசக்தி துறையும் (DOE) இணைந்து சாத்தியமான விண்வெளி அணுசக்தி தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.

நியூக்ளியர் ஃபிஸன் சர்ஃபேஸ் பவர் சிஸ்டம் வடிவமைப்பிற்கான ( nuclear fission surface power system design)  மூன்று கருத்து முன்மொழிவுகளை, ஏஜென்சிகள் தேர்ந்தெடுத்தன. நாசாவின் கூற்றுப்படி, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அத்தகைய தொழில்நுட்பத்தின் ஒரு செயல்விளக்கம் சந்திரனுக்கு பயன்படுத்தப்படலாம். இது எதிர்காலத்தில் நிலவுக்கான ஆர்ட்டெமிஸ் பயணங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது பல தசாப்தங்களுக்குப் பிறகு மனிதகுலம் பூமியின் செயற்கைக்கோளுக்குத் திரும்புவதைக் காணும்.

இதற்காக, அமெரிக்க எரிசக்தி துறை, தனது ஐடாஹோ தேசிய ஆய்வகத்தின் மூலம் தோராயமாக 5 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தங்களை வழங்கியது.

ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியானது நிலவில் உள்ள கடுமையான சூழலில் குறைந்தது 10 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட 40-கிலோவாட் ஃபிஸன் பவர் அமைப்பிற்கான (40-kilowatt fission power system) ஆரம்ப வடிவமைப்புக் கருத்துகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும். லாக்ஹீட் மார்ட்டின், வெஸ்டிங்ஹவுஸ் மற்றும் IX ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. மூன்றுமே மற்ற நிறுவனங்களுடனும் கூட்டு சேரும்.

நியூக்ளியர் ஃபிஸன் சிஸ்டம்’ சந்திர சூழலுக்கு ஏற்றது, ஏனெனில் அவை ஒப்பீட்டளவில் சிறியவை மற்றும் இலகுவானவை.  மேலும், அவை இருப்பிடம், சூரிய ஒளி மற்றும் பிற இயற்கை நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் நம்பகத்தன்மையுடன் சக்தியை உருவாக்க முடியும். சந்திரனில் அத்தகைய மின் உற்பத்தி அமைப்பை நிலைநிறுத்துவது சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்ட கால பயணங்களுக்கு வழி வகுக்கும்.

“பிஷன் சர்ஃபேஸ் பவர் ப்ராஜெக்ட் என்பது, நிலவில் அணுசக்தியை நிறுவுவதற்கான அமெரிக்காவின் முதல் படியாகும். இந்த அணிகள் ஒவ்வொன்றும் எதைச் சாதிக்கும் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன், ”என்று ஐடாஹோ தேசிய ஆய்வக இயக்குனர் ஜான் வாக்னர், நாசா செய்தி அறிக்கையில் கூறினார்.

இதன் மூலம், நாசா தொழில்துறையிலிருந்து முக்கியமான தகவல்களைப் பெறும், இது ஃபுல் பிளைட் சர்டிஃபயடு ஃபிஸன் பவர் சிஸ்டமின் கூட்டு வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இந்த ஃபிஸன் சர்ஃபேஸ் பவர் தொழில்நுட்பங்கள், ராக்கெட் எரிபொருளுக்கு பதிலாக, சக்தியை உருவாக்க உலைகளை நம்பியிருக்கும் அணு உந்து அமைப்புகளை உருவாக்க நாசாவுக்கு உதவும். அவை ஆழமான விண்வெளி ஆய்வு பணிகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Nuclear fission surface power system first step of nuclear power on the moon