அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. அந்தவகையில், வியாழனை சுற்றியுள்ள ட்ரோஜன் சிறுகோள்களை ஆய்வு செய்வதற்காக லூசி என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சூரிய குடும்பத்தின் பரிணாமத்தையும் இது ஆய்வு செய்யும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் அனுப்பபட்ட விண்கலம், 12 ஆண்டுகள் செயல்பட்டு ஆய்வு மேற்கொள்ளும் என நாசா தெரிவித்துள்ளது. விண்கலம், ஆரம்பகால சூரிய மண்டலத்தின் புதைபடிவங்களைப் போன்ற புதிரான சிறுகோள்களுக்கான பயணத்தில் 3 புவி ஈர்ப்பு விசையை அதிகரிக்க உதவுகிறது. விண்கலம் அதன் முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.
விண்கலம் அக்டோபர் 13 அன்று பூமி-சந்திரனை 1.4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஒரு சேர படம் பிடித்து அனுப்பியுள்ளது. லூசி சூரிய சக்தியால் இயங்கும் முதல் விண்கலமாக மாறும். மேலும் அதிகமான சிறுகோள்களை கவனித்து ஆய்வு செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
லூசியின் முதல் சந்திப்பு 2025-ம் ஆண்டு செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் உள்ள மெயின் பெல்ட்டில் டொனால்ட் ஜோஹன்சன் என்ற சிறுகோளுடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“