உலகின் குளிர்வூட்டும் அனைத்து அம்சங்களையும் மற்ற பசுமையக வாயுக்களைக் காட்டிலும் அதிக அளவில் ஓசோன் மண்டலம் சூடேற்றி செயலிழக்க வைக்க துவங்கியுள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகில் உள்ள பெருங்கடல்கள் சூடாவதற்கு கீழ் மற்றும் மேலடுக்கில் அமைந்திருக்கும் ஓசோன் வாயு செறிவில் ஏற்பட்டிருக்கும் மாற்றமே காரணம் என்று கூறப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு முக்கிய காரணியாக இது அமைந்துள்ளது.
தொடர்ச்சியாகவும் ஆழமாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வகையில் சூடாகி வரும் தெற்கு கடல்களால் உலகின் பல்வேறு பகுதிகள் அளவுக்கு அதிகமான கடுமையான வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓசோன் என்பது மற்று தூசியை போன்றே பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு சேர்மானமாகும். இது வளிமண்டலத்தில் மேல் அடுக்கு மற்றும் கீழ் அடுக்குகளால் ஆனது. கீழ் வளிமண்டலத்தில் அதிகரிக்கும் ஓசோனின் அளவு காரணமாக இத்தகைய வெப்பநிலை உயர்வை உலக நாடுகள் சந்தித்து வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
கலிபோர்னியா பல்கலைக்கழக ரிவர்சைடு தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் புதிய ஆராய்ச்சி, நேச்சர் க்ளைமேட் சேஞ்ச் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
1955 மற்றும் 2000 க்கு இடையில் மேல் மற்றும் கீழ் வளிமண்டலத்தில் ஓசோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களை உருவகப்படுத்தவும், மற்ற தாக்கங்களிலிருந்து அவற்றைத் தனிமைப்படுத்தவும், தெற்குப் பெருங்கடலின் வெப்ப அதிகரிப்பில் அவற்றின் தாக்கத்தைப் பற்றிய தற்போதைய மோசமான புரிதலை சரி செய்யவும் அந்த குழு மாதிரிகளைப் பயன்படுத்தியது.
இந்த உருவகப்படுத்துதல்கள் மூலம் மேல் வளிமண்டலத்தில் ஓசோன் குறைவு ஏற்பட்டிருப்பதையும், கீழ் வளிமண்டலத்தில் அதிகரித்திருப்பதையும் இந்த இரண்டு காரணங்களால் தான் ஒட்டுமொத்த பசுமை இல்ல வாயு அதிகரிப்பால் உயர் அட்சரேகைகளில் உள்ள கடல் நீரின் மேற்பரப்பு 2 கிமீ வெப்பமடைவதற்கு வழி வகுத்தன என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.
பூமியின் மேற்பரப்பை அடையும் ஆபத்தான புற ஊதா கதிர்வீச்சை வடிகட்டுவதால் ஓசோன் படலம் இன்றியமையாதது. இந்த கண்டுபிடிப்பு மாண்ட்ரீல் நெறிமுறைக்கு வழிவகுத்தது, இது CFCகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான சர்வதேச ஒப்பந்தமாகும்.
தொழில்துறை மற்றும் நுகர்வோர் பொருட்களில் பயன்படுத்தப்படும் வாயுவான குளோரோபுளோரோகார்பன்களால் (CFC கள்) ஏற்பட்ட சேதம் காரணமாக, தென் துருவத்தில் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தில் ஒரு ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டபோது ஓசோன் முதல் முறையாக செய்திகளில் தலைப்பானது. இன்று வெப்பநிலை உயர்வு குறித்து பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் இந்த ஓசோன் படல ஓட்டை மிக முக்கிய விவாதமாக இடம் பெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil