மன அழுத்தம் ஏற்பட்ட, தாவர வகைகள் ஒலிகள் எழுப்பும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல் அவீவ் பல்கலைக்கழகத்தின் ( Tel Aviv University) ஆய்வாளர்கள், மரம், செடிகள் வெளிப்படுத்தும் ஒலிகளை ஆய்வு செய்துள்ளனர். நாம் கணினியில் கிளிக் செய்யும்போதும் வெளிப்படும் ஒலியைவிட இது மிகவும் குறைவான ஒலியை எழுப்புகிறது.
இந்த ஒலியானது, உயர்ந்த அல்ட்ராசோனிக் அலையாக வெளிப்படும் ( high ultrasound frequencies). இந்த ஒலிகளை நாம் கேட்க முடியாது. இந்த ஆய்வானது தக்காளி மற்றும் புகையிலை செடிகளில் நடைபெற்றது. கூடுதலாக கோதுமை, மக்காச்சோளம், காக்டஸ் மற்றும் ஹென்பிட் உள்ளிட்ட தாவர வகைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.
தாவரங்கள், மன அழுத்தத்தில் இருக்கும்போது, ஒலி எழுப்பும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான ஒலிகளையும் தாவரங்கள் எழுப்பும் என்றும் இந்த ஒலிகள் ஆந்தை, பூச்சிகள், எலிகள் போன்ற விலங்களுக்கு கேட்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
தாவரங்களின் ஒலிகளை எப்படி ஆய்வாளர்கள் கவனித்தார்கள் ?
வெளியிலிருந்து எழுப்பப்படும், ஒலிகள் கேட்காத அளவில், ஒரு பெட்டிக்குள் தாவரத்தை வைத்தார்கள். மேலும் சுற்றியும் எந்த ஒலிகள் இல்லாத அமைதியான இடத்தை தேர்வு செய்தாளர்கள்.
அல்ட்ராசோனிக் மைக்ரோபோன்களை வைத்து,தாவரங்களின் ஒலிகளை பதிவு செய்தார்கள். இந்த மைக்ரோபோன்கள் மூலம் 20 முதல் 250 கிலோ ஹர்ட்ஸ் வரை ஒலிகளை கேட்க முடியும்.
ஒலிகள் கேட்காமல் இருக்கும், பெட்டிக்குள் தாவரங்களை வைப்பதற்கு, முன்பு சில செடிகள் பல நாட்கள் தண்ணீர் ஊற்றாமலும், சில செடிகளின் கிளைகள் வெட்டப்பட்டும், சில செடிகள் அப்படியே வைக்கப்பட்டன.
இந்நிலையில் 40 முதல் 80 கிலோ ஹர்ட்ஸ் அளவில் தாவரங்கள் ஒலி எழுப்புகின்றன. நன்றாக பராமரிக்கப்பட்ட செடிகள், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒலி எழுப்பின. ஆனால் பாதிக்கப்பட்ட தாவரங்கள் ஒரு மணி நேரத்தில் பல முறை ஒலிகள் எழுப்பின.
இதுபோல ஏ.ஐ தொழில்நுட்பத்தை வைத்து, தாவரங்களின் ஒலிகளை பதிவு செய்ய முடியும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஏ.ஐ-யின் அல்காரிதம் ( algorithms), எந்த தாவர வகை என்றும் அது எந்த அளவில் மன அழுத்தத்தில் இருக்குகிறது என்பதையும் கண்டறிகிறது.
மேலும் பின்னணி சத்தங்களின்போதும், கூட தாவரங்களின் ஒலியை பதிவு செய்ய ஏ.ஐ தொழில் நுட்பம் உதவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.