Advertisment

பூமியைக் கடக்கும் அபாயகரமான சிறுகோள்..  புர்ஜ் கலீஃபா விட இரு மடங்கு பெரிது!

1989 JA என பெயரிடப்பட்ட இந்த சிறுகோள், 1.1 மைல் நீளம், இரண்டு கிலோமீட்டர் அகலம் உள்ளது. இது 30,000 மைல் வேகத்தில் பயணிக்கும்.

author-image
WebDesk
New Update
asteroid-fb

Representational image

புர்ஜ் கலீஃபாவை விட இரண்டு மடங்கு மற்றும் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட நான்கு மடங்கு பெரிய அபாயகரமான சிறுகோள் வெள்ளிக்கிழமை பூமியைக் வெள்ளிக்கிழமை பூமியை கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது.

Advertisment

லைவ் சயின்ஸ் அறிக்கையின்படி,1989 JA என பெயரிடப்பட்ட இந்த சிறுகோள், 1.1 மைல் நீளம், இரண்டு கிலோமீட்டர் அகலம் உள்ளது. இது 30,000 மைல் வேகத்தில் பயணிக்கும்.

மே 27, அன்று பூமிக்கு மிக அருகில் வரும்போது JA 40,24,182 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அடுத்த 172 ஆண்டுகளுக்கு இது கிரகத்திற்கு மிக அருகில் இருக்கும்.

அப்பல்லோ சிறுகோள் - பூமியின் சுற்றுப்பாதையை அவ்வப்போது கடக்கும் போது சூரியனைச் சுற்றி வரும் சிறுகோள்களுக்கு கொடுக்கப்பட்ட சொல்-அதன் சுற்றுப்பாதையை மாற்றினால் அது பூமிக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் " அபாயகரமானது" என்று பெயரிடப்பட்டுள்ளது.

"சில சூழலில், இது காற்றில் புல்லட்டின் வேகத்தை விட 17 மடங்கு அதிகம் பயணிக்கும். இந்த வேகத்தில், சிறுகோள் பூமியை 45 நிமிடங்களில் சுற்றி வர முடியும் என்று,யுனிஸ்டெல்லர் என்ற தொலைநோக்கி நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரியும், SETI இன்ஸ்டிட்யூட்டில் மூத்த கிரக வானியல் நிபுணருமான ஃபிராங்க் மார்சிஸ் யுஎஸ்ஏ டுடே-க்கு தெரிவித்தார்.

இந்த சிறுகோள் 1989 ஆம் ஆண்டு தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பாலோமர் ஆய்வகத்தில் வானியலாளர் எலினோர் ஹெலின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. நாசாவின் கூற்றுப்படி, பூமிக்கு அருகில் உள்ள 29,000 சிறுகோள்களில், அவற்றின் இருப்பு அறியப்படுகிறது,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment