இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் சந்திரனின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை முதல் முறையாக படம் எடுத்ததன் மூலம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. பிரக்யான் ரோவர், அதன் நேவிகேஷன் கேமராவை (NavCam) பயன்படுத்தி இந்தப் படத்தை எடுத்தது.
ரோவரில் உள்ள NavCam, Lander Horizontal Velocity Camera (LHVC) உடன் இணைந்துள்ளது. இது இரண்டும் ரோவரின் கண்களாக வேலை செய்கிறது. சந்திரனின் கரடுமுரடான மேற்பரப்பில் செல்ல வழிகாட்டுகிறது. இந்த கேமராக்கள் விஞ்ஞானிகளுக்கு சந்திர நிலப்பரப்பு, கனிமவியல் மற்றும் தனிமங்களைக் கண்டறிய உதவுகின்றன.
விக்ரம் லேண்டர் புகைப்படத்தை வெளியிட்டு இஸ்ரோ ஸ்மைல் ப்ளீஸ் என கேப்ஷன் பதிவிட்டுள்ளது. இந்த படத்தில் லேண்டரின் 4 கால்கள், 4 த்ரஸ்டர்கள், ரோவரின் சோலார் பேனல் மற்றும் ஆண்டெனா ஆகியவற்றைக் காட்டுகிறது. மேலும் சந்திரனின் தென் துருவத்தின் பாறை மற்றும் தூசி நிறைந்த நிலப்பரப்பையும் இந்த படம் காட்டுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“