ஜப்பானின் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஐஸ்பேஸால் தயாரிக்கப்பட்ட Hakuto-R லேண்டர், சந்திரனின் சுற்றுப்பாதையில் இருந்து சந்திரனை அழகாக படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த லேண்டர் கடந்த டிசம்பரில் அனுப்பிய “Crescent Earth” படத்தைப் போலல்லாமல், இந்த புதிய படம் சந்திர சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்பட்டது.
தற்போது லேண்டர் அனுப்பிய நிலவு படத்தில் சந்திரனில் பல பள்ளங்கள் இருப்பதைக் காட்டுகிறது. பகுதியளவும், முழு அளவிலான பள்ளங்களும் இருப்பதைக் காட்டுகிறது. மேலும் அந்த படம் விண்வெளியின் ஆழமான கருமையால் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஐஸ்பேஸின் 2.3 மீட்டர் உயரம் கொண்ட லேண்டர் சந்திரனுக்கு மெதுவான, குறைந்த ஆற்றல் கொண்ட பாதையை எடுத்து கொண்டது. சந்திர சுற்றுப்பாதையில் இணைவதற்கு முன் கிரகத்திலிருந்து சுமார் 1.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பறந்து சென்றது. இந்த லேண்டர் நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ஏவப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு சந்திரனை அடைந்தது.
ஹகுடோ-ஆர் லேண்டர், நிலவின் அருகில் உள்ள வடகிழக்குப் பகுதியில் உள்ள அட்லஸ் பள்ளத்தை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த பள்ளம் 87 கிலோமீட்டருக்கும் அதிகமாகவும், இரண்டு கிலோமீட்டருக்கு மேல் ஆழமாகவும் உள்ளது.
Hakuto-R லேண்டர் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கினால், சந்திரனில் தரையிரங்கும் முதல் தனியார் லேண்டர் என்ற வரலாற்றைப் படைக்கும். இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே நிலவில் "மென்மையான தரையிறக்கத்தை" நிர்வகித்துள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil