/tamil-ie/media/media_files/uploads/2023/04/New-Project90.jpg)
United Arab Emirate’s Rashid rover
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவரால் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டர் உடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) ரஷித் ரோவர் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பட்டது. 2022 டிசம்பரில் ஹகுடோ லேண்டர் ஏவப்பட்டாலும், அது 2023, ஏப்ரல் மாதத்தில் தான் நிலவை சென்றடையும் என திட்ட விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். மேலும், லேண்டர் மெதுவாக, குறைந்த ஆற்றல் கொண்ட பாதையில் செல்வதால் இவ்வளவு நாட்கள் எடுக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் லேண்டர் நிலவு சுற்றுப் பாதையை அடைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன் Hakutor-R மிஷன் நிலவு சுற்றுப் பாதையில் நுழைந்து சந்திரனைச் சுற்றி வந்து அதை தற்போது நெருங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) Hakutor-R மிஷன் திட்டத்தை செயல்படுத்த காத்திருக்கிறது. அதாவது இன்று ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டர் சந்திர மேற்பரப்பில் தரையிறங்கி ரஷித் ரோவரை தரையிறக்கி அதை நிலவில் ஆய்வு செய்ய செயல்படுத்தும். இந்த சாதனையை பல்வேறு உலக நாடுகள் உற்று நோக்கி காத்திருக்கின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/FujSzuWXoAEjbdJ.jpg)
விண்கலம் சுமார் 5 மாதத்தில் 1.6 மில்லியன் கிலோமீட்டகளை கடந்து சென்றுள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ரஷித் ரோவர் பணி என்ன?
10 கிலோ எடையுள்ள ரோவரில் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது ரோவரின் சுற்றுப்புறத்தின் பரந்த பார்வையை உறுதிப்படுத்துகிறது. பின்பக்கத்தில் பொருத்தப்பட்ட CASPEX கேமராவானது நிலவின் மண், மணலைப் படம்மெடுக்கும். 2 கேமராக்களும் உயர்தர தொழில்நுட்பத்துடன் அதிக தெளிவுத்திறன் கொண்டதாக உள்ளது. மண் மற்றும் சந்திர நிலப்பரப்பு தொடர்பான விரிவான ஆய்வு மேற்கொள்ள இந்த ரோவர் அனுப்பபட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.