விண்வெளியில் இருந்து ஒரு மர்மமான பொருள் கடந்த 2014ஆம் ஆண்டு நியூ கினியா கடற்கரை கடலில் விழுந்தது. CNEOS 2014-01-08 என பெயரிடப்பட்ட இந்த பொருள் முதலில் விண்கல் என்றும், விண்மீன் என்று ஆராய்சியாளர்கள் ஊகித்தனர். ஆனால் இது உண்மையில் என்னவென்று தெரியவில்லை. எங்கிருந்து விழுந்தது என்றும் தெரியவில்லை.
ஆராய்ச்சியாளர்கள் அமீர் சிராஜ் மற்றும் ஹார்வர்ட் பேராசிரியர் அவி லோப் அந்த பொருள் விண்மீன் தோற்றத்தை உடையதாக சந்தேகித்தனர். இவர்கள் தற்போது இந்த பொருள் குறித்து கடலின் தரைதளத்தை ஆய்வு செய்ய உள்ளனர்.
கேட்டலாக் டேட்டாவை பயன்படுத்தி ஆய்வு செய்ததில், அந்த பொருளின் அகலம் அரை மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொருளின் உயர் சூரிய மைய வேகத்தைக் குறிப்பிட்டு அது சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்ட இடத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
வேகத்தை குறிப்பிட்ட பார்க்கையில், இந்த விண்கல் சூரியனின் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்படவில்லை என்பதை காட்டுகிறது. சிராஜ் மற்றும் லோப் ஆகியோர் பூமியில் பொருளின் தாக்கத்தை அளவிட அமெரிக்க பாதுகாப்பு துறை உளவு செயற்கைக்கோளிலிருந்து தரவுகளை பயன்படுத்தினர். இருப்பினும் CNEOS2014-01-08-யை விண்மீன் என அறிவிப்பதற்கு போதுமான தரவுகள் இல்லை.
இந்தநிலையில் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கடல் தரையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சிதறிய விண்கற்களின் துண்டுகளை தேடி ஆய்வு மேற்கொள்கின்றனர். செயற்கைக்கோள் தரவு, காற்று, கடல் பற்றிய சமீபத்திய தரவுகள் உதவியாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil