காசிரங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை உயர்வு; மகிழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள் | Indian Express Tamil

காசிரங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை உயர்வு; மகிழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள்

காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ள 1355 சதுர கிலோ மீட்டர் பரப்பில் காண்டாமிருகங்கள் மட்டும் காணப்படும் 864 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Rhino Population up by 200 in Kaziranga

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை காசிரங்கா பூங்காவில் அதிகரித்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பிற்கு பிறகு தற்போது கூடுதலாக 200 காண்டாமிருகங்கள் அங்கே அதிகரித்திருப்பது இயற்கை ஆர்வலர்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது 2413 காண்டாமிருகங்கள் பதிவு செய்யப்பட்டது. காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ள 1355 சதுர கிலோ மீட்டர் பரப்பில் காண்டாமிருகங்கள் மட்டும் காணப்படும் 864 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மார்ச் 25 முதல் 28 வரை இந்த கணக்கெடுப்பு தேசிய பூங்காவின் 84 பகுதிகளில் 50 யானைகளின் உதவியுடன் நடத்தி முடிக்கப்பட்டது.

தமிழக தனியார் காடுகளுக்கான சட்டத்தில் மாற்றமா? எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

125 கண்காணிப்பாளர்கள், தன்னார்வலர்கள் மட்டுமின்றி 252 முன்களப் பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது மொத்தமாக இந்த பகுதியில் 2613 காண்டாமிருகங்கள் உள்ளன. வருடத்திற்கு 50 என்ற ரீதியில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

இதே சமயத்தில் இந்த பகுதியில் 400 காண்டாமிருகங்கள் பல்வேறு காரணங்களால் பலியாகியுள்ளன. அவற்றில் 3 மனிதர்களால் வேட்டையாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக இந்த கணக்கெடுப்பின் போது ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 26 பகுதிகளில் மறுமுறை எண்ணிக்கையை சரிபார்க்க பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

146 குட்டிகள், 279 இளம் வயது காண்டாமிருகங்கள் மற்றும் 1823 வயது வந்த காண்டாமிருகங்கள் இப்பகுதியில் வசித்து வருவதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. ஓராங்க் தேசிய பூங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டு இதன் எண்ணிக்கை 101 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் போபித்தோரா சரணாலயத்தில் இதன் எண்ணிக்கை வெறும் 5 மட்டுமே அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இயல்புக்கு மாறாக, ஒரு மாதத்திற்கு முன்பே முட்டையிடும் பறவையினங்கள்! காரணம் என்ன?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Rhino population up by 200 in kaziranga