சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பபட்ட சோயுஸ் விண்கலத்தில் கடந்த வாரம் கசிவு ஏற்பட்டது. இதனால் விண்வெளி வீரர்களின் நடைப்பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கசிவு குறித்து ஆய்வு செய்ய 17 மீட்டர் நீளமுள்ள கனடா தயாரிப்பான ரோபோடிக் ஆர்ம் (Robotic arm) இயந்திரத்தை ரஷ்யா அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷ்யா வீரர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 15-ம் தேதி ரஷ்ய வீரர்கள் விண்வெளி நடைப்பயணம் செய்யவிருந்த நிலையில், சோயுஸ் விண்கலத்தின் வெளிப்புறத்தில் கூலன்ட் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது. விண்வெளி வீரர்கள்
செர்ஜி ப்ரோகோபியேவ், டிமிட்ரி பெட்லின் ஆகியோர் அடுத்த நடைப்பயணத்திற்கு காத்திருக்கின்றனர்.
சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் எஸ்.எஸ்.ஆர்.எம்.எஸ் (ரோபோடிக் ஆர்ம்) ஸ்பேஸ் ஸ்டேஷன் ரிமோட் மேனிபுலேட்டர் சிஸ்டத்தின் கேமராக்கள் மூலம் ஆய்வு செய்யப்படும் என்று ரஷ்யா விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. ஆய்வின் முடிவுகளை இந்த கருவி பூமிக்கு அனுப்பும் எனவும் தெரிவித்துள்ளது.
Canadarm2 என்று அழைக்கப்படும், SSRMS கருவி 17 மீட்டர் நீளமுள்ள கருவியாகும். பராமரிப்பு, பொருட்களை நகர்த்துதல் மற்றும் விண்கல ஆய்விற்கு அனுப்பபடுவதாகும்.
சோயுஸ் எம்எஸ்-22 விண்கலத்தின் வெப்பநிலை பூமியில் இருந்து மாஸ்கோவிற்கு அருகிலுள்ள மிஷன் கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர்களால் குறைக்கப்பட்டது, குறிப்பிட்ட வரம்புகளுக்குள் உள்ளது, என்று ரஷ்யா தெரிவித்தது. முன்னதாக, இந்தாண்டு சோயுஸ் எம்எஸ்-22 விண்கலத்தில் ரஷ்யா வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பபட்டனர். தற்போது விண்கலத்தில் கசிவு ஏற்பட்ட நிலையிலும், அங்குள்ள விண்வெளி வீரர்களுக்கு ஆபத்து இல்லை என நாசா, ரஷ்யா விண்வெளி நிறுவனங்கள் தெரிவித்தன.
கஜகஸ்தானில் உள்ள பைகோனூரில் இருந்து சோயுஸ் எம்.எஸ்-23 ஏவுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன, தேவைப்பட்டால் ஏவுதலை விரைவுபடுத்தலாம் என்று ரஷ்யா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/