இது நமது சூரிய குடும்பத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய வால் நட்சத்திரமாகும். 2014 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வால் நட்சத்திரம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப் பெரியதாக இருந்தது.
வால்நட்சத்திரம் பெரியதாக இருக்கிறது. ஹாலியின் வால் நட்சத்திரத்தை விட மிகப் பெரியதாக இருக்கிறது. சுமார் 11 கிலோமீட்டருக்கும் சற்று அதிகமாக இருக்கும்.
இதை பூமியில் இருந்து கண்ணால் பார்க்க முடியாது. ஏனெனில் அது வெகு தொலைவில் உள்ளது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது இப்போது பூமியிலிருந்து சுமார் 3 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பில் இருந்து புதிய படங்களின் உதவியுடன் விஞ்ஞானி ஜூவிட் மற்றும் அவருடைய குழுவினர் விண்மீனின் அளவைக் கணக்கிட்டனர்.
5G ஸ்பெக்ட்ரமுக்கு TRAI-ன் பரிந்துரைகள் என்ன? தொழில்துறையின் கவலைகள் என்னென்ன?
நிலக்கரியை விட கறுப்பாக இருக்கிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். பெர்னார்டினெல்லி-பெர்ன்ஸ்டீன் என்றழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரம் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவர சுமார் 3 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil