உலகம் முழுவதும் அறிவியல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளும் விண்வெளிக்கு விண்கலம் மற்றும் மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் விண்வெளிப் பயணத்தில் மனித உடல்களில் ஏற்படும் மாற்றம் குறித்து நாசா ஆய்வு மேற்கொண்டது. விண்வெளிப் பயணத்தின் போது மைக்ரோகிராவிட்டி மற்றும் பிற காரணங்களால் மனித உடலில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆய்வு செய்தது.
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) அல்லது நாசா விண்வெளி விண்கலங்களில் 6 மாதம் தங்கி ஆய்வு மேற்கொண்ட விண்வெளி வீரர்களிடம் நாசா இந்த சோதனையை செய்தது. அதில் விண்வெளி வீரர்களின் பெருமூளை வென்ட்ரிக்கிள்கள் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிறமற்ற மற்றும் நீர் நிறைந்த திரவம் மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் பாய்கிறது. இது திடீர் தாக்கத்திலிருந்து பாதுகாக்க மூளையை மெத்தனமாக்குகிறது மற்றும் கழிவுப்பொருட்களை நீக்குகிறது. இந்த ஆராய்ச்சிகாக 30 விண்வெளி வீரர்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பயணங்களுக்குப் பிறகு வென்ட்ரிக்கிள்கள் முழுமையான சீரான நிலைக்கு வர 3 ஆண்டுகள் ஆகிறது எனவும் அவர்கள் கண்டறிந்தனர்.
கண்காணிப்பு தேவை
இந்த 3 ஆண்டுகால இடைவெளி அவசியமாகிறது. இதற்கு போதுமான காலம் இல்லை என்றால் மைக்ரோ கிராவிட்டியில் திரவ மாற்றங்களைச் சமாளிக்கும் மூளையின் திறனை இது பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, முந்தைய பணியிலிருந்து வென்ட்ரிக்கிள்கள் ஏற்கனவே பெரிதாக்கப்பட்டிருந்தால், அவை குறைவான இணக்கமாக இருக்கலாம் மற்றும்/அல்லது அடுத்த பணியின் போது திரவ மாற்றங்களை விரிவுபடுத்துவதற்கும் இடமளிப்பதற்கும் குறைவான இடத்தைக் கொண்டிருக்கலாம் என்று புளோரிடா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஹீதர் மெக்ரிகோர் கூறினார்.
புளோரிடா பல்கலைக்கழகத்தின் உடலியல் மற்றும் இயக்கவியல் பேராசிரியரும் ஆய்வின் மூத்த எழுத்தாளருமான ரேச்சல் சீட்லர் கூறுகையில், "விண்வெளி வீரர்களிடம் இந்த வென்ட்ரிகுலர் விரிவாக்கத்தின் தாக்கம் தற்போது காணப்படவில்லை. இதற்கு நீண்ட கால சுகாதார கண்காணிப்பு தேவைப்படுகிறது. இந்த ஆய்வில் வென்ட்ரிகுலர் விரிவாக்கம் சுற்றியுள்ள மூளை திசுக்களை அழுத்துகிறது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“