வியாழன் கோளின் பெரும்பாலான படங்கள் அதன் மீது கோடுகள் அமைந்துள்ளதை காட்டுகின்றன. அதாவது, கிரகத்தின் மீதுள்ள ராட்சத சிவப்பு புள்ளிகளைப் போல் அதில் பல்வேறு நிறத்தில் கோடுகள் உள்ளன.
எனினும் இந்தக் கோடுகள் மாறிவருகின்றன. இதற்கான காரணம் விஞ்ஞானிகளால் இதுவரை கண்டறிய முடியவில்லை. இது தொடர்பாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துவந்தன.
இந்த நிலையில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர். அதில் வியாழன் கோளில் இது ஏன் நிகழ்கிறது என விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விளக்கத்தை லீட்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வின் இணை ஆசிரியர் கிறிஸ் ஜோன்ஸ் கூறுகையில், “நீங்கள் ஒரு தொலைநோக்கி மூலம் வியாழனைப் பார்த்தால், பூமத்திய ரேகையை அட்சரேகைக் கோடுகளுடன் சுற்றி வரும் கோடுகளைக் காணலாம்.
நீங்கள் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் பார்த்தால், அசாதாரணமான வலுவான கிழக்கு மற்றும் மேற்குக் காற்றுகளால் மேகங்கள் ஜிப்பிங் செய்வதைக் காணலாம்.
பூமத்திய ரேகைக்கு அருகில், காற்று கிழக்கு நோக்கி வீசுகிறது, ஆனால் நீங்கள் வடக்கு அல்லது தெற்கில் சிறிது அட்சரேகையை மாற்றினால், அது மேற்கு நோக்கி செல்கிறது.
பின்னர் நீங்கள் சிறிது தூரம் நகர்ந்தால் அது மீண்டும் கிழக்கு நோக்கி செல்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி வீசும் காற்றின் இந்த மாற்று முறை பூமியில் உள்ள வானிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது” எனறார்.
ஜோன்ஸின் கூற்றுப்படி, ஒவ்வொரு நான்கு ஐந்து வருடங்களுக்கும், கிரகத்தில் கோடுகள் மாறுகின்றன. அதாவது, சில நேரங்களில், பெல்ட்களின் நிறங்கள் மாறலாம்.
எனினும் இது ஏன் நடக்கிறது என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது. இருப்பினும், வியாழனின் மேற்பரப்பிற்கு கீழே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகச்சிவப்பு மாறுபாடுகளுடன் தோற்றத்தில் இந்த மாற்றம் இணைக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஏற்கனவே சான்றுகள் உள்ளன.
ஆனால் ஜோன்ஸ் மற்றும் பிறரின் புதிய ஆராய்ச்சி, இந்த மாறுபாடுகள் கிரகத்தின் உட்புறத்தில் ஆழமான வாயு ராட்சத காந்தப்புலத்தால் உருவாகும் அலைகளால் ஏற்படக்கூடும் என்பதை குறிப்பிடுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் ஜூனோ மிஷன் மூலம் கிரகத்திற்கு சேகரிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தினர், மேலும் அவர்களால் அதன் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கவும் கணக்கிடவும் முடிந்தது.
மேலும், கிரகத்தின் காந்தப்புலத்தின் ஊசலாட்டங்கள் அதன் வாயுக்களிலிருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சின் காலங்களுக்கு ஒத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.