நமது சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம் இருக்கலாம் ஆனால் அது சூரியனில் இருந்து தொலைதூரத்தில் மறைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நமது சூரிய குடும்பத்தில் தற்போது 8 கோள்கள் உள்ளன. இது முன்பு ஒன்பது ஆக இருந்தது. ஆனால் புளூட்டோ கிரகம் நாளடைவில் கிரகமாக கருதப்படவில்லை என விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, சூரியன் ஊர்ட் கிளவுட்டில் தொலைதூரத்தில் ஒரு கிரகம் மறைந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தகவல் கூறுகின்றனர். எனினும் இந்த ஆய்வு மதிப்பாய்வு செய்யப்படவில்லை.
நாசாவின் கூற்றுப்படி, "ஊர்ட் கிளவுட் (Oort Cloud) என்பது சூரிய குடும்பத்தின் தொலைதூர பகுதியாகும். இது பில்லியன் கணக்கான அல்லது டிரில்லியன் கணக்கான பனிக்கட்டி விண்வெளி குப்பைகளால் நிறைந்துள்ளது. அவை மலைகளின் அளவு அல்லது பெரியதாக இருக்கலாம். இது ஏற்கனவே கிட்டத்தட்ட 50 வானியல் அலகுகள் வரை நீண்டிருக்கும் கைபர் பெல்ட்டை விட பல மடங்கு தொலைவில் இருப்பதாக கருதப்படுகிறது. ஒரு வானியல் அலகு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.
நியூ பிரிண்ட் பேப்பர் வெளியிட்ட கட்டுரையில் (மதிப்பாய்வு செய்யப்படவில்லை) ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு, நமது சூரிய குடும்பத்தின் தொலைதூர எல்லையில் ஒரு கிரகம் மறைந்து கொண்டிருக்கலாம்" என கண்டறிந்துள்ளனர்.
மேலும், வேறொரு அமைப்பில் இருந்து இதுபோன்ற ஒரு ரஃக் கிரகம் நமது கிரகத்தின் ஈர்ப்பு விசையால் சிக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதையும் குழு கண்டறிந்துள்ளது. இது குறித்தான வாய்ப்புகளையும் அவர்கள் மதிப்பிடுகின்றனர்.
தி இன்டிபென்டன்ட் நிறுவனத்திற்கு சர்வதேச குழு அளித்த பேட்டியில், து சூரிய குடும்பத்தின் ஆரம்ப கட்டங்களில் ஏற்படும் உறுதியற்ற தன்மைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால் இது மிகையாக மதிப்பிடப்படலாம் என்று கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“