நாசாவின் ஃபெர்மி காமா-கதிர் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து அனுப்பட்ட தரவுகள், சுமார் 12 ஆண்டு தரவுகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். நமது விண்மீன் முழுவதும் உள்ள PeVatrons ஒரு வகையான மிக அதிக ஆற்றல் கொண்ட காஸ்மிக் துகள்களின் தகவலை கண்டுபிடித்தனர். Physical Review Letters என்ற புத்தகத்தில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
காஸ்மிக் கதிர்கள் எனப்படும் துகள்கள் நமது விண்மீனைச் சுற்றி பயணிக்கின்றன. அவை நமது கிரகத்தின் வளிமண்டலத்தை தொட்டு பயணிக்கிறது. அவை பொதுவாக புரோட்டான்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் சில சமயங்களில் அணுக்கருக்கள் மற்றும் எலக்ட்ரான்களையும் கொண்டிருக்கிறது. விண்மீனின் காந்த சக்தி பாதையில் செல்லும்போது பாதையிலிருந்து விலகுகின்றன.
காஸ்மிக் கதிர்களின் பகுதியாக இருக்கும் துகள்கள் சூப்பர்நோவா எச்சங்களுக்கு அருகில் உள்ள வாயுவுடன் மோதும்போது, அவை காமா கதிர்களை உருவாக்குகின்றன. கதிர்வீச்சின் மிக அதிக ஆற்றல் வாய்ந்த வடிவங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது.
மில்கிவேயில் உள்ள அதிக ஆற்றல் கொண்ட காஸ்மிக் கதிர் புரோட்டான்கள் ஒரு மில்லியன் பில்லியன் எலக்ட்ரான் வோல்ட் அல்லது PeV ஆற்றல்களை அடைகின்றன. PeVatrons மூலம் பொருள் குறித்து துல்லியமான தன்மையைக் கண்டறிவது கடினமாக உள்ளது என்று விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் உதவிப் பேராசிரியர் கே ஃபாங் கூறினார்.
இந்த உயர் ஆற்றல் மிகுந்த அண்டத் துகள்களை உருவாக்கும் பெவட்ரான்கள் இருக்கக்கூடிய சில இடங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இவைகள் இயற்கையாகவே சூப்பர்நோவா எச்சங்கள். ஆனால் அறியப்பட்ட 300 எச்சங்களில், ஒரு சிலது மட்டுமே பெவட்ரான் எனக் கருதப்படும் அளவுக்கு அதிக ஆற்றல் கொண்ட காமா கதிர்களை வெளியிடுகின்றன.
G106.3+2.7, செபியஸ் விண்மீன் மண்டலத்தின் திசையில் 2,600 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு வால்மீன் வடிவ மேகம், முதன்மையானதாக கருத்தப்படுகிறது. சூப்பர்நோவா எச்சத்தின் வடக்கு முனை ஒரு பிரகாசமான பல்சரின் முன்னிலையில் குறிக்கப்படுகிறது மற்றும் வானியலாளர்கள் இரண்டு பொருட்களும் ஒரே வெடிப்பில் உருவானதாக நம்புகின்றனர்.
ஹென்ரிக் ஃப்ளீஷ்ஹாக் ஆய்வு மேற்கொண்டவர்களில் ஒருவர் கூறுகையில், "இந்தப் பொருள் இப்போது சிறிது காலமாக கணிசமான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. பெவட்ரான் என உறுதியாக கூற புரோட்டான்களை நிரூபிக்க வேண்டும். 12 ஆண்டுகால ஃபெர்மி தரவுகளின் உதவியுடன் G106.3+2.7 உண்மையில் ஒரு PeVatron என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம் என்பதை நம்புகிறோம்" என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.