கால நிலை மாற்றம் காரணமாக இயற்கை அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. விஞ்ஞானிகளும் இது குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகின்றனர். இந்நிலையில் அண்டார்டிக் பனி பாறைகள் இதுவரை இல்லாத அளவாக வேகமாக உருகிவருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக லோ லெவல் அளவை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் இருந்ததை விட பனிகட்டிகள் மிகவும் குறைந்துள்ளது என தி கார்டியன் சனிக்கிழமை தெரிவித்தது.
பிப்ரவரி 25 அன்று 1.79 மீ சதுர கிமீ என்ற மிகவும் குறைவான லோ லெவல் அளவை எட்டியுள்ளது. 2022-ம் ஆண்டில், கடல் பனியின் அளவு பிப்ரவரி 25 அன்று 1.92 மீ சதுர கி.மீ ஆகக் குறைந்து இருந்தது. 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்புகளின் அடிப்படையில் இது மிகவும் குறைந்த அளவாக இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவாக பனி பாறைகள் வேகமாக உருகி பிப்ரவரி 25 ஆம் தேதி 1.79 மீ சதுர கிமீ என்ற மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. டாஸ்மேனியாவின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
ஆஸ்திரேலிய அண்டார்டிக் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகளான டாக்டர் ராப் மாசம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர் பில் ரீட் ஆகியோர் வழங்கிய தரவுகளின் படி, இது கண்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு நீர் கடந்த மாதம் வெளியேறியது. இந்த நிலை நீண்ட கால சராசரியான சுமார் 50 சதவீதத்தை விட அதிகமாக இருந்தது என்றனர்.
பனி பாறைகள் இவ்வளவு வேகமாக உருவதற்கு என்ன காரணம் என பதில் தேடி வருகின்றனர். இது இயற்கையான நிகழ்வா அல்லது காலநிலை மாற்றத்திற்கான நெருக்கடி அறிகுறிகளா என்ற கேள்வி விஞ்ஞானிகளுக்கு எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/