ஐரோப்பாவில் இருக்கும் தரை வண்டுகளின் டுவாலியஸ் வகையைச் சேர்ந்த வண்டுகள், மேற்கு செர்பியாவில் நிலத்தடி குழியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது வேகம், வலிமை, நீடித்து நிலைப்பு மற்றும் கடினமான சூழலில் உயிர்வாழும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது. டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். டென்னிஸ் விளையாட்டில் பல சாப்பியன் பட்டங்களை வென்றுள்ளார். செர்பியாவிற்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், ஜோகோவிச்சிற்கு பெருமை சேர்க்கும் விதமாக புதிய வகை வண்டுக்கு நோவக் ஜோகோவிச்சின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர். இந்த வகை வண்டு நிலத்தடியில் இருக்கும் கோலியோப்டெரா வண்டு, ஆழமான நிலத்தடியில் வாழும் என்று ஆய்வாளர் நிகோலா வெசோவிக் கூறினார்.
வெசோவிக் கூறுகையில், “இந்த நாட்டிற்காக நிறைய பெருமை சேர்த்தவர். அவருக்கு எங்களால் முடிந்த வழியில் திரும்ப செலுத்துகிறோம்” என்று கூறினார்.

35 வயதான ஜோகோவிச் 21 கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை வென்றுள்ளார். இந்தாண்டு ஜூலையில் 7-வது விம்பிள்டன் பட்டதைப் பெற்றார். டெல் அவிவ் ஓபன் போட்டியில் வென்றார். அஸ்தானா ஓபன் சாப்பியன் போட்டியில் ஜோகோவிச் விளையாடி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“