நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் மாதம் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு சுவாரஸ்யமான மாதமாக இருக்கும். சூரிய குடும்பத்தில் உள்ள மிகப் பெரிய கோளான வியாழன் மற்றும் சனி இம்மாதம் முழுவதும் வானில் தெரியும். செவ்வாய் கோள் வழக்கமாக சுற்றும் திசையில் இருந்து மாறி மேற்கு நோக்கி நகரும். ஓரியானிட் விண்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
வியாழன், சனி கோள்
வியாழன் மற்றும் சனி கோள்கள் அக்டோபர் மாதம் முழுவதும் இரவு வானில் தெரியும். மாலையில், அவற்றை வானின் தென்கிழக்கில் காணலாம். பின் இரவு மெதுவாக நகர்ந்து மேற்கு நோக்கி செல்லும். இந்த இரண்டு கிரகங்களும் ஃபோமல்ஹாட் என்ற பிரகாசமான நட்சத்திரத்துடன் இணைந்து ஒரு முக்கோணத்தை உருவாக்குகின்றன. நட்சத்திரங்களைப் போல் இது மின்னாது.
மேற்கு நோக்கி நகரும் செவ்வாய்
செவ்வாய் கிரகம் ஆண்டு முழுவதும் கிழக்கு நோக்கி நகர்கிறது. இருப்பினும், அக்டோபர் இறுதியில் சிவப்பு கிரகம் (செவ்வாய்) தனது இயக்கத்தை மாற்றியமைக்கிறது. நவம்பர் முதல் ஜனவரி பிற்பகுதி வரை வழக்கத்திற்கு மாறாக இரவு மேற்கு நோக்கி நகரும். இது மீண்டும் ஜனவரியில் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கும். இந்த மாறுபட்ட இயக்கத்திற்கு ரெட்ரோகிரேடு மோஷன் ஆப் மார்ஸ் (Retrograde motion of Mars) எனப் பெயர்.
நமது கிரகமும், செவ்வாயும் பூமியின் உள் சுற்றுப்பாதையில் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. 26 மாதங்களுக்கு ஒருமுறை நமது கிரகம் செவ்வாய் கிரகத்தை முந்தி சுற்றுகிறது. இது அதன் சுற்றுப்பாதையில் மெதுவாக நகரும். செவ்வாய் கோளை கடக்கத் தொடங்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், அதைக் கடக்க சுற்றிச் செல்வதற்கு முன், செவ்வாய் அதே திசையில் நகர்ந்தாலும், திசை மாறுவது போல் தோன்றுவதைக் காண்கிறோம்.
ஓரியானிட் விண்கல்
ஓரியானிட் விண்கல் இம்மாதத்தில் அதிக விண்கற்கள் உற்பத்தி செய்யும். அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு பத்து முதல் இருபது விண்கற்கள் வரை உற்பத்தி செய்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் முழுவதும் இது தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil