நிங்கலூ என்று பெயரிடப்பட்டுள்ள அரிய வகை ஹைபிரிட் சூரிய கிரகணம் இன்று (ஏப்ரல் 20) இந்திய நேரப்படி காலை 7.09 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 மணி வரை நடைபெறுகிறது. இது முழு சூரிய கிரகணமாக தோன்ற உள்ளது. வானத்தில் சில நிமிடங்களுக்கு முழு இருளையும், நெருப்பு வளையத்தையும் கொண்டு வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சந்திரன் (நிலா) சூரியனை மறைக்கும் போது “நெருப்பு வளையம்” தோன்றும் என்றும் கூறியுள்ளனர்.
Advertisment
இருப்பினும் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. மேற்கு ஆஸ்திரோலியாவில் சிறப்பாக காண முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதன்படி மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Exmouth நகரில் கிரகணத்தை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். இதற்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Telescope, Lens, Expensive lenses வைக்கப்பட்டுள்ளது. கிரகணத்தை நேரடியாக காண கூடாது. அதேபோல் பெர்த் (Perth ) நகரில் இருந்தும் கிரகணத்தை சிறப்பாக காண முடியும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நேரடி ஒளிபரப்பு யூடியூப் லிங்க்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“