பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது பகுதி அளவாக அல்லது முழுவதுமாக சூரிய ஒளி தடுக்கப்படும் இதனை சூரிய கிரகண நிகழ்வு என்று கூறுவார்கள். அதன்படி, இன்று இந்த நிகழ்வு அரங்கேறுகிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய கிரகணம் இதுவாகும். இது ஒரு சில இடங்களில் மட்டுமே தெரியும்.
சூரியனின் ஒளி பூமியில் படாதவாறு நிலவின் ஒளி மறைத்துக் கொள்வது தான் சூரிய கிரகணம் ஆகும். இதனால் சூரியனின் கதிர்கள் பூமி மீது சில நிமிடங்களுக்கு படாமல் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. தற்போதைய நிலவரப்படி, சூரியனின் ஒளியை குறிப்பிட்ட பகுதி மட்டுமே சந்திரன் மறைக்கிறது. அதன் காரணமாக இது பகுதி அளவு சூரிய கிரகணமாக அறியப்படுகிறது.
கிரகணம் பகுதியளவாக நிகழ்கிறது. இது இரட்டை சூரிய உதய கிரகணம் என்றும் குறிப்பிடப்படுகிறது. அரிய நிகழ்வாக சூரியன் இரண்டு முறை உதயமாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வை உலகின் பல பகுதிகளில் இருந்து பார்க்க முடியும், ஆனால், இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. அமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்தின் சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு இது தெரியும்.
பகுதி சூரிய கிரகணத்தை எப்படி பார்ப்பது?
வரவிருக்கும் பகுதி சூரிய கிரகணத்தைக் காண நீங்கள் ஆர்வமாக இருந்தால், மேற்கூறிய நாடுகளில் ஒன்றிற்கு நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். மாற்றாக, உங்கள் வீட்டிலிருந்து பல்வேறு ஆன்லைன் தளங்களில் இந்நிகழ்வை காணலாம்.
இது இந்திய நேரப்படி மதியம் சரியாக 2.20 மணி முதல் மாலை 4.17 மணி வரை நீடிக்கிறது. மாலை 4.17 மணிக்கு அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து சூரிய கிரகணம் தெரியும்.
Timeanddate.com இன் அறிக்கையின்படி, பகுதி சூரிய கிரகணம் 814 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தெரியும். இது உலக மக்கள் தொகையில் 9.94 சதவீதமாகும். இருப்பினும், 44,800 நபர்கள் மட்டுமே கிரகணத்தை அதன் உச்சத்தில் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
அதைக் காணக்கூடியவர்களில் நீங்களும் இருந்தால், கிரகணத்தின் போது சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம். ஏனெனில், அது உங்கள் பார்வையை நிரந்தரமாக பாதிக்கும். சூரிய கிரகணக் கண்ணாடிகள் அல்லது பாதுகாப்புக் கருவிகளை எப்போதும் பயன்படுத்தவும்.