Surya Grahan 2023 Date, Time : “நிங்கலூ” அரிய வகை ஹைபிரிட் சூரிய கிரகணம் நாளை (ஏப்ரல் 20) நிகழ உள்ளது. இது முழு சூரிய கிரகணமாக தோன்ற உள்ளது. வானத்தில் சில நிமிடங்களுக்கு முழு இருளையும், நெருப்பு வளையத்தையும் கொண்டு வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சந்திரன் (நிலா) சூரியனை சிறிதளவு மறைக்கும் போது “நெருப்பு வளையம்” போல் தோன்றும் என்றும் கூறியுள்ளனர்.
எனினும் இந்த ஹைபிரிட் சூரிய கிரகணத்தை பகுதி அளவாகவோ, முழுமையாகவே இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் இந்த கிரகணத்தை சிறப்பாகப் பார்க்க முடியும். “நிங்கலூ” என்ற வார்த்தை ஆஸ்திரேலியாவின் நிங்கலூ கடல் பெயரில் இருந்து வைக்கப்பட்டது. இந்தியாவில் காண முடியாது என்றாலும் நேரடி ஸ்ட்ரீமிங் மூலம் கிரகணத்தை காணலாம்.
நாளை நிஹைபிரிட் சூரிய கிரகணம் உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன், முழு கிரகணமாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது.

எந்த நேரத்தில் கிரகணம் தோன்றும்?
மேற்கு ஆஸ்திரேலியாவின் அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு நகரத்தில் மட்டுமே முழு கிரகணம் தெரியும். Exmouth இலிருந்து பார்க்கும்போது, ஏப்ரல் 20-ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.34 முதல் 6.32 வரை கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்களுக்கு பகுதி சூரிய கிரகணம் ஏற்படும். இருப்பினும், அந்த நேரத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு 4.29 முதல்
4.30 வரை முழு கிரகணம் தெரியும்.
தென்கிழக்கு ஆசியா, கிழக்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இருந்தால் பகுதி அளவு கிரகணத்தை காண முடியும் என்று முன்னாள் நாசா வானியல் இயற்பியலாளரும் கிரகண நிபுணருமான பிரெட் எஸ்பெனாக் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil