இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரவுள்ளது. உலகம் முழுவதும் பாதி அளவு சூரிய கிரகணம் தெரியும்.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுமையாகவோ, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றழைப்படுகிறது.
இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் , தென் அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும்.
பொதுவாக கிரகணம் நிகழும் போது, அதில் இருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன.
இந்த கிரகணம் சனி அமாவாசை அன்று நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி முடிந்த பிறகு நிகழப்போகும் இந்த சூரிய கிரகணம் கவனத்தைப் பெற்றுள்ளது.
வாட்ஸ்அப் நம்பர் சேவ் செய்யாமல் மெசேஜ் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்
தென் அமெரிக்கா, சிலி, உருகுவே, பொலிவியா, பெரு, பிரேசிலின் தெற்கு பகுதி, அர்ஜென்டீனா இந்த நாடுகளில் பகுதி அளவு சூரிய கிரகணம் தெரியும்.
தென் கடலோரா பிராந்தியங்களில் சூரிய கிரகணம் தெரியும் என்று நாசா அறிவித்துள்ளது. சில யூ-டியூப் சேனல்களில் நேரடி ஒளிபரப்பாக இந்த நிகழ்வு காட்டப்படவுள்ளது. அதில் நாம் காணலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil