ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி என்பது விண்மீன்களை அளவிடுவதற்கு உலகம் அறிந்த மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.
ஹப்பிள் தற்போது’ நமது பிரபஞ்சம் எவ்வளவு விரைவாக விரிவடைகிறது என்பதை தீர்மானிக்கும் மிகப் பெரிய அளவிலான பணியில் ஈடுபட்டுள்ளது. இப்போது, புதிய கண்டுபிடிப்புகள் பிரபஞ்சம் ஒரு சீரான விகிதத்தில் விரிவடையவில்லை என்று கூறுகின்றன.
ஹப்பிள் தரவுகளின் அடிப்படையில், நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தின் விரிவடையும் விகிதத்தில் முரண்பாடுகள் இருப்பதாலும், பெருவெடிப்புக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளாலும், பிரபஞ்சத்தில் "வித்தியாசமான ஒன்று" நடக்கிறது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா குறிப்பிடுகிறது,
எட்வின் பி ஹப்பிள் மற்றும் ஜார்ஜஸ் லெமைட்ரே ஆகியோரின் அளவீடுகளின் போது, பிரபஞ்சம் எவ்வாறு விரிவடைந்தது மற்றும் எவ்வளவு வேகமாகச் சென்றது என்பது பற்றிய ஆய்வு பல தசாப்தங்களுக்கு முன்பு 1920 இல் தொடங்கியது.
நமக்கு வெளியே உள்ள விண்மீன் திரள்கள் நிலையானவை அல்ல என்று நாசா விளக்குகிறது உண்மையில், இந்த விண்மீன் திரள்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்கின்றன.
இந்த விண்மீன் திரள்கள் சீரற்ற, அதிகரித்து வரும் வேகத்தில் நகர்கின்றன என்று ஹப்பிள் கூறினார். ஒரு விண்மீன் பூமியிலிருந்து எவ்வளவு தூரம் சென்றதோ, அவ்வளவு வேகமாக அது விலகிச் சென்றது.
விஞ்ஞானிகள் இந்த நிகழ்வைப் புரிந்து கொள்ளவும், இந்த விரிவாக்கத்தின் வீதத்தை அளவிடவும் முயன்றனர். இருப்பினும், இப்போது ஹப்பிளின் தரவுகள் கிடைத்துள்ளதால், மாடல்கள் கணித்ததை விட, விரிவாக்கம் இன்னும் வேகமாக இருப்பதாகத் தெரிகிறது.
ஒரு மெகாபார்செக்கிற்கு வினாடிக்கு 67.5 (plus or minus 0.5) கிலோமீட்டர் என்று எதிர்பார்க்கப்படுவதற்குப் பதிலாக, ஒரு மெகாபார்செக்கிற்கு வினாடிக்கு 73 (plus or minus 1) கிலோமீட்டர் என்று அவதானிப்புகள் குறிப்பிட்டன.
விஞ்ஞானிகள் தற்போது விண்வெளி மற்றும் நேரத்தின் “milepost markets” விசித்திரமான நிகழ்வைப் படித்து வருகின்றனர். தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் நம்மை விட்டு மேலும் நகர்ந்து கொண்டே இருப்பதால், பிரபஞ்சத்தின் விரிவாக்க வீதத்தைக் கண்காணிக்க இவை பயன்படுத்தப்படலாம்.
1990 இல் தொலைநோக்கி ஏவப்பட்டதிலிருந்து ஹப்பிள்’ 40 க்கும் மேற்பட்ட மைல்போஸ்ட் மார்க்கர்ஸை அளவீடு செய்துள்ளது என்று நாசா கூறியுள்ளது.
பிரபஞ்சத்தின் விரிவாக்கம் பற்றிய நமது புரிதலின் புதிய மதிப்பீட்டை புதிய தரவு உடைத்துள்ள நிலையில், விஞ்ஞானிகள் இப்போது புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து வரும் தரவுக்காக் காத்திருக்கிறார்கள், இது விஷயத்தை ஆழமாகப் பார்க்க அனுமதிக்கும்.
"வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்’ இந்த காஸ்மிக் மைல்போஸ்ட் மார்க்கர்ஸை, அதிக தூரத்தில் அல்லது ஹப்பிள் பார்க்கக்கூடியதை விட கூர்மையான தெளிவுத்திறனில் காட்டுவதன் மூலம் ஹப்பிளின் வேலையை நீட்டிக்கும்" என்று நாசா கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.