Advertisment

ககன்யான் சோதனை, புதன் மீது எலக்ட்ரான் மழை: கடந்த வார விண்வெளி நிகழ்வுகள்

இஸ்ரோவின் ககன்யான் திட்டப் பணிகள், புதன் மீது எலக்ட்ரான் மழை உள்பட முந்தைய வாரத்தில் நிகழ்ந்த விண்வெளி தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Gaganyaan

ISRO is test firing the Gaganyaan mission's service module's propulsion systems in this image. (ISRO via Twitter)

அப்பல்லோ 11, ககன்யான் திட்ட சோதனை பணிகள், செவ்வாய் கிரகத்தில் உள்ள எக்ஸ்-ரே அரோராக்கள், புதன் மீது எலக்ட்ரான் மழை உள்பட முந்தைய வாரத்தில் நிகழ்ந்த விண்வெளி நிகழ்வுகள் குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

சர்வதேச நிலவு தினம் மற்றும் லூனாவிற்கு பந்தயம்

நாசாவின் அப்பல்லோ 11 திட்டம் மேற்கொண்ட நாளை ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 20-ம் தேதியை ர்வதேச நிலவு தினமாக அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது. நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கிய நாள் ஆகும்.

20 ஆம் நூற்றாண்டு அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான தீவிரமான விண்வெளிப் பந்தயத்தைக் குறிக்கும் அதே வேளையில், 21 ஆம் நூற்றாண்டில் அந்த பந்தயத்தில் இரண்டு முக்கிய நாடுகள் சீனா மற்றும் இந்தியா உள்ளது.

இவற்றில் சீனா உள்பட மூன்று நாடுகள் ஏற்கனவே நிலவில் மென்மையான தரையிறக்கத்தை செய்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியா சந்திரயான் -3 திட்டத்தில் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது வெற்றி பெறும் வகையில் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் உலகின் முதல் நாடாக இந்தியா மாறும்.

publive-image
Astronaut Neil Armstrong can be seen on the Moon in this image from NASA.

ககன்யான் மிஷன் ப்ரொபல்ஷன் மாட்யூல்

அடுத்தாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கு தயாராகி வருகிறது, இது நாட்டின் முதல் குழு விண்வெளி ஆய்வு பணியாக இருக்கும்.

ககன்யான் பணியின் சேவைத் தொகுதியின் உந்துவிசை அமைப்பை புதன்கிழமை 250 வினாடிகளுக்கு அதன் 21 உந்துதல்களை சுடுவதன் மூலம் சோதனை செய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சமீபத்தியது சேவை தொகுதிக்கான இரண்டாம் கட்ட சோதனைகளின் ஒரு பகுதியாகும், மேலும் 21 த்ரஸ்டர்களும் ஒரே நேரத்தில் சோதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ககன்யான் பணியானது, பூமிக்கு மேலே 400 கிலோமீட்டர் உயரத்திற்கு 3 நாள் பயணத்தில் மூன்று விண்வெளி வீரர்களை அனுப்புவதன் மூலம் இந்தியாவின் மனித விண்வெளிப் பயண திறன்களை வெளிப்படுத்த தயாராக உள்ளது. எல்.வி.எம்3 (லாஞ்ச் வெஹிக்கிள் மார்க் 3) மூலம் பூமியில் இருந்து ஒரு அற்புதமான பணியைத் தொடங்கும்.

புதன் மீது எலக்ட்ரான் மழை

புதன் மீது எலக்ட்ரான் மழை பொழிந்து எக்ஸ்-ரே அரோராக்களை ஏற்படுத்துகிறது. இப்போது நாம் பூமியிலிருந்து வெகு தொலைவிற்கு செல்வோம். உண்மையில், இது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அது தான் புதன் (மெர்குரி) கிரகம். BepiColombo விண்கலம் அக்டோபர் 1, 2021 அன்று எரியும்-சூடான கிரகத்திற்கு அருகில் முதல் முறையாக நெருங்கிச் சென்றது. விண்கலம் வடக்கு அரைக்கோளத்தின் இரவுப் பக்கத்திலிருந்து புதனை நெருங்கி, தெற்கு அரைக்கோளத்தின் காலைப் பக்கத்தில் நெருங்கி வந்தது.

publive-image
Artist’s impression of the BepiColombo spacecraft amidst X-ray auroras on Mercury.

விண்கலத்தின் அவதானிப்புகளைப் பயன்படுத்தி, கிரகத்தின் மேற்பரப்பில் சூரியனிலிருந்து வரும் எலக்ட்ரான்கள் புதன் மீது எக்ஸ்-ரே அரோராக்களை உருவாக்குகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

A universe with little to no dark matter

இப்போது, ​​நாம் இன்னும் தொலைவில், பால்வீதியில் இருந்து 220 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் மண்டலத்திற்குச் செல்கிறோம் - NGC 1277. இந்த விண்மீனைக் கவனித்தபின், ஆராய்ச்சியாளர்கள் அதில் கரும்பொருள் இல்லை என்று முடிவு செய்துள்ளனர், இது பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய வானியலாளர்களின் புரிதலை மேம்படுத்துகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isro Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment