scorecardresearch

ஐ.எஸ்.எஸ்க்கு மாற்று? விண்வெளி ஸ்டார்ட்அப்- ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து புதிய விண்வெளி நிலையம் அமைக்க திட்டம்

ஹேவன்-1 (Haven-1)என அழைக்கப்படும் உருளை விண்கலம் (Cylindrical spacecraft) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாக திட்டமிடப்பட்டுள்ளது.

SpaceX- Space-station
SpaceX- Space-station

கிரிப்டோகரன்சி பில்லியனர் ஜெட் மெக்கலேப்பிற்கு சொந்தமான வாஸ்ட் (Vast) விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து 2025-ம் ஆண்டில் விண்வெளி சுற்றுப் பாதையில் ஒரு பள்ளி பேருந்து அளவிலான
விண்வெளி நிலையத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

ஹேவன்-1 என அழைக்கப்படும் உருளை விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாக தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் பழமையான சுற்றுப்பாதை ஆராய்ச்சி ஆய்வகம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் நடத்தப்படுகிறது.

ஐ.எஸ்.எஸ் (சர்வதேச விண்வெளி நிலையம்) 2030-ல் ஓய்வு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாசா ஐ.எஸ்.எஸ்க்கு மாற்றாக வணிக விண்வெளி நிலையங்களை உருவாக்க விரும்புகிறது. நார்த்ரோப் க்ரம்மன் மற்றும் கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களுக்கு 2021 ஆம் ஆண்டில் நிறுவனம் $415 மில்லியன் மேம்பாட்டு நிதியை வழங்கியது.

இதில் வாஸ்ட் நிறுவனம் இடம்பெறவில்லை. இருப்பினும் நிறுவனம் 2028 வரை சில பணிகளுக்காக நாசா நிதியுதவியை பெறும் என நிறுவனத்தின் தலைவர் மேக்ஸ் ஹாட் தெரிவித்தார். வணிக விண்வெளி நிலையம் தொடர்பான கருத்துக்கு நாசா பதிலளிக்கவில்லை.

மேலும், எந்தவொரு தனியார் நிறுவனமும் இதுவரை விண்வெளி நிலையத்தை உருவாக்கி நிலைநிறுத்தவில்லை. கால்பந்து மைதான அளவிலான ஐ.எஸ்.எஸ், பல ஏவுதல்களை கண்டுள்ளது. அதன் வாழ்நாளில் பல்வேறு கூறுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Space startup partners with spacex to launch commercial space station

Best of Express