எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ராக்கெட் ஸ்டார்ஷிப் நேற்று (ஏப்ரல் 17) தனது முதல் சோதனை முயற்சிக்கு தயாராக இருந்தது. இந்தநிலையில் திடீரென ராக்கெட்டின் முதல் நிலை அமைப்பில் சூப்பர் ஹெவி பூஸ்டரி ஏற்பட்ட காரணமாக ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளித் தளமான ஸ்டார்பேஸில் இருந்து அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ராக்கெட்டாக தயாரிக்கப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் கிட்டத்திட்ட 400 அடி (120-மீட்டர்) உயரம் மற்றும் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. Stainless steel அமைப்பால் ஆன ராக்கெட் 2 நிலைகளைக் கொண்டுள்ளது. சூப்பர் ஹெவி ராக்கெட் (முதல் நிலை) மற்றும் ஸ்டார்ஷிப் விண்கலம் (இரண்டாம் நிலை) ஆகியவற்றுடன் ஒன்றாக ஸ்டார்ஷிப் என அழைக்கப்படுகிறது. 150 டன் பேலோடு வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
நேற்று ஏவுதல் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாரத்தில் பேக்அப் (Backup) ஏவுதலுக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. சோதனையின் போது, சூப்பர் ஹெவி ராக்கெட்டையோ அல்லது ஸ்டார்ஷிப் விண்கலத்தையோ தரையிறக்காது எனத் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil