எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஜூலை 19-ம் தேதி 5 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளித் தளத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் பூமியின் குறைந்த சுற்றுப்பாதைக்கு (Low Earth orbit) ஏவியது. இந்நிலையில் செயற்கைக் கோள்களை ஏவும்போது ராக்கெட் பூமியின் அயனோஸ்பியரில் மோதி துளையிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அயனோஸ்பியர் என்பது பூமியின் வளிமண்டலத்தில் மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளைக் கொண்ட தொடர்ச்சியான பகுதிகளைக் குறிக்கிறது. நாசாவின் கூற்றுப்படி, ரேடியோ மற்றும் ஜி.பி.எஸ் சிக்னல்கள் இந்தப் பகுதி வழியாக பயணிப்பதால் இந்தப் பகுதி தகவல் தொடர்பு மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் பாதிப்பு ஏற்பட்டால் சிக்னல் இடையூரு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
Spaceweather.com இந்த வார தொடக்கத்தில் SpaceX இன் ஜூலை 19 அயனோஸ்பியரில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தியதாக அறிவித்தது. "பூமியின் மேற்பரப்பில் இருந்து 200 முதல் 300 கி.மீ உயரத்தில் ராக்கெட்டுகள் அதன் பாகங்களை வெடிக்கச் செய்தது. ராக்கெட்டின் 2-வது கட்டத்தில் இருந்து வெளியேறும் வாயுக்கள் அயனோஸ்பியரை விரைவாக மீண்டும் இணைக்கும் போது சிவப்பு பளபளப்பு தோன்றுகிறது ”என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியலாளர் ஜெஃப் பாம்கார்ட்னர் கூறினார்.
வளிமண்டலத்தில் உள்ள இத்தகைய துளைகள் குறைந்த அதிர்வெண் கொண்ட ரேடியோ தகவல்தொடர்புகளை பாதிக்கலாம் மற்றும் ஜிபிஎஸ் வழிசெலுத்தல் அமைப்புகளில் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இத்தகைய பாதிப்புகள் தற்காலிகமானவை, ஏனென்றால் சூரியன் உதித்த பிறகு மீண்டும் ரீஐயோஜைசேஜன் தொடங்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“