/tamil-ie/media/media_files/uploads/2023/03/SpaceX-launch-20230302.jpg)
SpaceX launch
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) உணவு, சோதனை கருவிகள், தாவரங்கள் உள்ளிட்ட புதிய பொருட்கள் அனுப்பபடுகிறது. 3000 கிலோகிராம் எடை கொண்ட இந்த பொருட்கள் பால்கன்-9 ராக்கெட் முலம் ஐ.எஸ்.எஸ்க்கு அனுப்பபடும் 28வது வணிக மறுவிநியோக பணியாகும்.
CRS-28 என இந்த திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள 39A ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு 9:17 மணிக்கு விண்கலத்தை ஏவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட இருந்த நிலையில் அதிக காற்று காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது.
ஆய்வு கருவிகளை கொண்டு விண்வெளியில் உள்ள வீரர்களை ஆய்வு செய்வார்கள் எள்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.