scorecardresearch

முதல்முறையாக மறுபயன்பாட்டு ராக்கெட்டை ஏவும் ஸ்பெயின்.. பெரும் எதிர்பார்ப்பு

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 2 பொறியியலாளர்கள் மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கியுள்ளனர்.

முதல்முறையாக மறுபயன்பாட்டு ராக்கெட்டை ஏவும் ஸ்பெயின்.. பெரும் எதிர்பார்ப்பு

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 2 பொறியியலாளர்கள் மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கியுள்ளனர். தங்கள் நாட்டு விண்வெளி போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் ராக்கெட் ஏவப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவிலிருந்து ஏவப்படும் முதல் தனியார் மறுபயன்பாட்டு ராக்கெட் இதுவாகும்.

தனியார் விண்வெளி நிறுவனமான பி.எல்.டி ஸ்பேஸில் பணிபுரியும் ரவுல் டோரஸ் மற்றும் ரவுல் வெர்டு ஸ்பெயினின் காளைச் சண்டை பாரம்பரியத்தில் புகழ்பெற்ற காளை இனத்தின் பெயரான “மியுரா” -வை தங்கள் துணை மைக்ரோலாஞ்சருக்கு வைத்துள்ளனர். துணை மைக்ரோலாஞ்சர் “மியுரா 1” என்று பெயரிடப்பட்டுள்ளது.

மைக்ரோலாஞ்சர் மூன்று மாடி கட்டடம் அளவிற்கு உயரமானது. 100-கிலோ (220-எல்.பி) சுமந்து செல்லும் திறன் கொண்டது மற்றும் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் செயல்படும் திறன் கொண்டது ஆகும்.

பி.எல்.டி மைக்ரோலாஞ்சர் தெற்கு ஸ்பெயினில் உள்ள ஹுல்வாவில் இருந்து இந்தாண்டு இறுதியில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் ராணுவ ஏவுதளத்தில் கடந்த சனிக்கிழமை பிரதமர் பெட்ரோ சான்செஸ் முன்னிலையில் ராக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. ராக்கெட் குறித்து பிரதமர் பேசுகையில், “மைக்ரோலாஞ்சர் உருவாக்கம் நாட்டின் விண்வெளி லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கியமான படி” என்று பாராட்டினார்.

உலக நாடுகளுடன் ஈடு செய்யும் வகையிலும் ஐரோப்பிய நாடுகளின் உந்துதலுக்கு மத்தியில் ஸ்பெயின் தனது சொந்த விண்வெளி நிறுவனத்தை மார்ச் 7 அன்று தொடங்கியது. செவில்லியால் நிறுவப்பட்டுள்ள ஸ்பானிஷ் விண்வெளி நிறுவனத்திற்கு 745 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 75 பேர் பணிபுரிவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Spains race to space about to blast off with reusable rocket launch