பாலூட்டி வகையை சேர்ந்த ராட்சத காண்டாமிருகங்கள் சீனா, மங்கோலியா, கஜகஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் காணப்பட்டன.
எனினும் இந்த ராட்சத காண்டாமிருகங்கள் எவ்வாறு ஆசிய கண்டம் முழுவதும் பரவியது என்பது பல காலமாக அறியப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்திய கண்டுபிடிப்பு இதனை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
இது தொடர்பாக கம்யூனிகேஷன்ஸ் பயாலஜி என்ற இதழில் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. சீன அறிவியல் அகடமி மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், காண்டாமிருகங்கள் ஆசியா முழுவதும் பரவியதற்கான தடயங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
முன்னதாக, திபெத்திய பீடபூமியின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள லின்சியா பேசின் பிற்பகுதியில் ஒலிகோசீன் படிவுகளிலிருந்து புதைபடிவங்கள் மீட்கப்பட்டன.
இந்தப் புதைபடிவங்களின் நீட்சிகள் ஆசியா முழுவதும் ஆங்காங்கே காணப்படுகின்றன. அதாவது ராட்சத காண்டாமிருகங்கள் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழ்ந்துள்ளன.
அந்த வகையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காண்டாமிருகங்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளன என்பது தெரியவந்துள்ளது. அதாவது சீனாவில் இருந்து கஜகஸ்தான், கஜகஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என பரவி உள்ளன.
இந்த இடம் பெயர்த்தல் நீண்ட நாள்களாக நடந்துள்ளது. காண்டாமிருகங்கள் வானிலைக்கு ஏற்ப தெற்கு ஆசியா வரை பரவியுள்ளன.
தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் துணை கண்டத்தை அடைந்து உள்ளன. மேலும், இந்தப் பரிணாமம் மற்றும் இடம்பெயர்வு, "திபெத்திய பீடபூமி" இன்னும் மிகப்பெரிய நில பாலூட்டிகளின் இயக்கத்திற்கு ஒரு தடையாக இல்லை என்பதைக் காட்டுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/