ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் மூலம் கையா (Gaia spacecraft) என்ற விண்கலம் விண்ணில் ஏவிப்பபட்டது. இது விண்வெளியில் உள்ள பொருட்களின் தூரம், காலம், வயது, வேகம் உள்ளிட்ட பல விஷயங்களை கணிக்க கூடியது.
இந்தநிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் கையா விண்கலம் தகவல் அனுப்பியுள்ளது. அதில், நூற்றுக்கணக்கான மில்லியன் நட்சத்திரங்களின் உள்ளார்ந்த பண்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன.
அவை எவ்வளவு வெப்பமானவை, எவ்வளவு பெரியதாவை மற்றும் அதன் எடை ஆகியவற்றை தெரிவித்துள்ளது. இவற்றை ஒப்பீடு செய்து வானியலாளர்கள் சூரியன் வருங்காலத்தில் எப்படி எல்லாம் மாற்றம் அடையும் என்று கணித்துள்ளனர். மற்ற நட்சத்திரங்களை ஒப்பீடு செய்தும் கணித்துள்ளனர்.
தற்போது சூரியன் சுமார் 4.57 பில்லியன் ஆண்டுகள் கொண்டு நடுத்தர வயதில் உள்ளது. நீண்ட கால பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டுள்ளது. தன்னை உயிருடன் வைத்திருக்க ஹைட்ரஜனை ஹீலியமாக இணைத்துக்கொண்டு நிலையானதாக உள்ளது. இதனால் சூரியனின் வெப்பம் குறையாது.
இருப்பினும், எதிர்காலத்தில், ஹைட்ரஜன் அதன் மையத்தில் இருந்து வெளியேறி இணைப்பு செயல்பாட்டில் மாற்றங்கள் தொடங்கும் போது, சூரியன் ஒரு சிவப்பு ராட்சத நட்சத்திரமாக மாறி (ரெட் ஜெயிண்ட்) அதன் மேற்பரப்பில் வெப்பநிலையைக் குறைக்கும்.
ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "சூரியன் 8 பில்லியன் ஆண்டுகள் அதன் வெப்பநிலை மற்றும் வெளிச்சத்தை வெளிப்படுத்தும். அதன் பின்னர் அது குளிர்ந்து, அதன் அளவு அதிகரித்து, சிவப்பு ராட்சத நட்சத்திரமாக மாறும். 1011 பில்லியன் ஆண்டுகளில், சூரியன் தனது வாழ்நாளின் முடிவு பகுதியை அடையும்" எனக் கூறியுள்ளனர். சூரியனின் அளவில் இருக்கும் மற்ற நட்சத்திரங்களை ஒப்பீடு செய்து கையா விண்கலம் இந்த தரவுகளை அனுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”