இன்று இரவில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றும் நேரம் இதுதான்: மிஸ் பண்ணாதீங்க மக்களே!

சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Super Blue Moon Tamilnadu Timing

Super Blue Moon Tamilnadu Timing

சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு இன்று (30.08.2023) இரவு 8.37 மணிக்கு விண்ணில் நிகழப் போகிறது. இதனை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்படும் ப்ளூ மூன் எனும் வானியல் அரிய நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற இருக்கிறது.

Advertisment

பூமியின் துணைக் கோளான நிலா புவியை சுற்றிவர 29.5 நாட்களாகிறது. அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் வரும். ஆனால், மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் இருமுறை பவுர்ணமி தோன்றும். அவ்வாறு ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு தோன்றும் போது, 2-வதாக வரும் முழு நிலவை ப்ளூ மூன் (நீல நிலவு) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்.

அந்த வகையில் ப்ளூ மூன் நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற இருக்கிறது. இந்த மாதத்தின் 1-ம் தேதியிலும் பவுர்ணமி தென்பட்டது. தொடர்ந்து 2-வது முழு நிலவு நாளான இன்று ப்ளூ மூன் நிகழ்வை காணலாம். இதற்கு முன்பு 2018, 2020 அக்டோபர் 21-ம் தேதியிலும் ப்ளூ மூன்தென்பட்டது. இந்த அரிய வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும். அப்போது நிலவின் அளவு வழக்கத்தை விட சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: