ராம நவமியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ராமர் சிலைக்கு ராம் லல்லாவின் சிலைக்கு 'சூரிய அபிஷேகம்' செய்யப்பட்டது. இந்து புராணங்களின்படி, ராம நவமி என்பது தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், அநீதியின் மீது நீதியின் வெற்றியையும் குறிக்கிறது.
Advertisment
'சூர்ய திலகம்' சுமார் நான்கு நிமிடங்கள் நீடித்தது. இந்த நிகழ்வு அயோத்தி முழுவதும் கிட்டத்தட்ட 100 இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெரிய எல்.இ.டி திரைகளில் காண்பிக்கப்பட்டது. சூர்ய திலக் நிகழ்வு என்பது ராமரின் நெற்றியில் சூரிய ஒளி படச் செய்வதாகும். இது கோயில் கட்டுபொழுதே அறிவியல் பூர்வமாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமரின் நெற்றியில் சூரிய ஒளி வரச் செய்தது.
கோயில் அதிகாரி கூறுகையில், “கோயிலின் தரை தளத்தில் 2 கண்ணாடிகள் மற்றும் ஒரு லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 3-வது தளத்தின் மாடியில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் இருந்து சூரிய ஒளி பாய்ந்து தரை தளத்தில் உள்ள சிலையின் மீது விழுகிறது. இதுவே சூரிய கதிர்கள் நெற்றியில் திலமாக தோன்றுகிறது” என்றார்.
கோவிலின் "கர்ப்ப கிரிஹா" அல்லது சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைக்குள் நேரடியாக சூரிய ஒளி நுழைய வழி இல்லாததால், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் மூலம் சிலையின் நெற்றியில் சூரியக் கதிர்களை வீசுவதற்கு ஒளியியல் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த ஆப்டோமெக்கானிக்கல் அமைப்பு ( optomechanical system) மூலம், ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி நாளில் சிலையின் மீது ‘சூர்ய திலகம்’ செய்யப்படும். சூரிய ஒளிக்கு ஏற்ப கண்ணாடி மற்றும் லென்ஸின் திசைகளை மாற்றி இது செய்யப்படும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“