Advertisment

113 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 113 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
113 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்துள்ளது. இந்தநிலையில், கடந்த வாரம் வறண்ட நதி ஒன்றில் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அக்ரோகாந்தோசொரஸ் என்ற டைனோசரின் கால்தடங்கள் தெரியவந்தன.

Advertisment

அந்த காலத்தில், கடலின் விளிம்பில் இந்த நதி அமைந்திருந்தது. அதனால் டைனோசர் கால்களை கழுவ சென்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். டைரனோசொரஸ் ரெக்ஸைப் போலவே, அக்ரோகாந்தோசொரஸ் வேட்டையாட கூடிய இனம். தோராயமாக நான்கு மெட்ரிக் டன் எடை கொண்டது. அக்ரோகாந்தோசரஸ் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

பலெக்ஸி நதியில் டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வறட்சி காரணமாக நதியில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. அதனால் தற்போது, நீரில் மூழ்கி இருந்த டைனோசர் கால்தடங்கள் வெளியில் தெரியவந்தது. டைனோசர் கால்விரல்களில் கூர்மையான நகங்கள் இருந்துள்ளன. ஓடுவதற்கும், இரையை தரையில் போட்டு தாங்குவதற்கும் டைனோசர் பயன்படுத்தி இருக்கும் என கூறுகின்றனர்.

டைனோசர் கால்தடங்கள் டைனோசர் வேலி மாநில பூங்காவில் பதிவு செய்யப்பட்டு, சேகரிக்கப்பட்டு வருகின்றன.

டெக்சாஸில் கடும் வறட்சி

டெக்சாஸில் கடும் வறட்சி நிலவுவதால் தடங்கள் தெரியவந்துள்ளன. இது "மெகா டிராட்" என்ற வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1,200 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி வறட்சியான காலகட்டத்தை அனுபவித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் சமீபத்திய ஆண்டுகளில் நிறைய பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஈராக்கில் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக வெண்கல யுக நகரமான சச்சிகுவை வெளிப்படுத்தியது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment