பல ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் பல சர்வதேச விவாதங்கள் இருந்தபோதிலும், காலநிலை மாற்றம் ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைப்பில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்க போராடி வரும் நிலையிலும்
ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள கோடைகால கடல் பனி 2030களில் அழிந்துவிடும் என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின்படி புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் குறைப்பது கூட வட துருவத்தின் பரந்த மிதக்கும் பனி உருகுவதைத் தடுக்காது என்று கூறப்பட்டுள்ளது.
ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தின் கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியரான டிர்க் நோட்ஸ் கூறுகையில்,
ஆர்க்டிக் கோடை கடல் பனி அதன் நிலப்பரப்பு மற்றும் வாழ்விடத்தை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை மிகவும் தாமதமானது என்று கூறினார்.
பாதிப்பு
இந்த பனிக்கட்டிகள் அழிவதால் காலப்போக்கில் வானிலை, மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படும் என்றும் இது அந்த பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகளவில் ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“