உலகெங்கிலும் உள்ள விண்வெளி நிறுவனங்களின் கூற்றுப்படி, நாளை அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி ஒரு பெரிய சூரிய புவி காந்த புயல் பூமியைத் தாக்க உள்ளது.
சூரியனின் செயல்பாடு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இந்த புவி காந்த புயல் அபாயகரமானதாக இருக்கலாம் என்ற கணிப்புகள் உள்ளன.
டுவிட்டர் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் ஏன் சேரவில்லை?
சூரியன் கணிசமான அளவு கரோனல் மாஸ் எஜெக்ஷனை அதிக செறிவு ஆற்றலுடன் பூமியை நோக்கி செலுத்த உள்ளது.
NASA மற்றும் NOAA ஆகியவை சூரியனால் ஏற்படும் CME உமிழ்வைக் கண்காணித்து வருகின்றன. மேலும் ஏப்ரல் 14 அன்று புயல் நமது கிரகத்தைத் தாக்கும் என்று கணித்துள்ளது.
இந்தப் புயல் பூமியைத் தாக்கிய பிறகு, அது மிக வேகமாக தீவிரமடையும் என்று நாசா கணித்துள்ளது.
இந்திய விண்வெளி அறிவியல் மையம் (CESSI) டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ஏப்ரல் 14, 2022 அன்று 429-575 கிமீ/வி வேகத்தில் பூமியின் தாக்கத்தின் மிக அதிக நிகழ்தகவைக் குறிக்கிறது. குறைந்த முதல் மிதமான புவி காந்த இடையூறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போது, சூரிய காற்று மற்றும் பூமிக்கு அருகில் உள்ள விண்வெளி சுற்றுச்சூழல் நிலைமைகள் பெயரளவுக்கு திரும்பி வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “