25,000 தீவுகள், உலகின் 50% நீர், ரிங் ஆப் பயர்ஸ்... பசுபிக் பெருங்கடலின் ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

பசுபிக் பெருங்கடல் உலகின் மிகப்பெரிய ஆழமான பெருங்கடல் ஆகும். இது பூமியின் மொத்த நிலப்பரப்பில் 3-ல் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. சுமார் 16.52 கோடி சதுர கி.மீ. பூமியின் மொத்த நிலப்பரப்புகளையும் (148 மில்லியன் சதுர கி.மீ.) இந்த கடலுக்குள் பொருத்த முடியும்.

பசுபிக் பெருங்கடல் உலகின் மிகப்பெரிய ஆழமான பெருங்கடல் ஆகும். இது பூமியின் மொத்த நிலப்பரப்பில் 3-ல் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. சுமார் 16.52 கோடி சதுர கி.மீ. பூமியின் மொத்த நிலப்பரப்புகளையும் (148 மில்லியன் சதுர கி.மீ.) இந்த கடலுக்குள் பொருத்த முடியும்.

author-image
Meenakshi Sundaram S
New Update
pacific ocean

25,000 தீவுகள், உலகின் 50% நீர், ரிங் ஆஃப் பயர்ஸ்... பசுபிக் பெருங்கடலின் ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

பசுபிக் பெருங்கடல் (Pacific Ocean) உலகின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் ஆகும். "அமைதியான கடல்" என்று பொருள்படும் பசிபிக் என்ற பெயரை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபெர்டினான்ட் மேகலன் என்பவர் 1521-ல் வழங்கினார். இந்தப் பிரம்மாண்டமான நீர்ப் பரப்பு பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

Advertisment

மொத்த பரப்பளவு  - சுமார் 16.52 கோடி சதுர கிலோமீட்டர்கள்

பூமியின் பரப்பில் பங்கு - சுமார் 36% (நிலம் மற்றும் நீர் சேர்த்து)

வடக்கு-தெற்கு நீளம் - சுமார் 15,500 கி.மீ. (ஆர்க்டிக்-அன்டார்டிக் வரை)

கிழக்கு-மேற்கு நீளம் - சுமார் 19,800 கி.மீ. (இந்தோனேசியா-கொலம்பியா)

சராசரி ஆழம் - சுமார் 4,300 மீட்டர்கள்

உலகின் அனைத்து நிலப்பகுதிகளையும் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து உட்பட) இந்த ஒரே பெருங்கடலுக்குள் பொருத்த முடியும். பூமியின் மொத்த நிலப்பரப்பு சுமார் 148 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே. அனைத்துக் கண்டங்களையும் பொருத்திய பிறகும், மீதமுள்ள இடத்தில் இந்தியா போன்ற பெரிய நாடுகள் சுமார் 8 நாடுகள் வரை பொருத்த முடியும்.

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மரியானா அகழி (Mariana Trench) தான் உலகின் மிக ஆழமான பகுதியாகும். இதன் ஆழம் சுமார் 10,928 மீட்டர்கள் ஆகும். இப்பெருங்கடல் கிட்டத்தட்ட 25,000 தீவுகளை உள்ளடக்கியுள்ளது. இந்தத் தீவுகளில் மெலனேசியா, மைக்ரோனேசியா மற்றும் பொலினேசியா ஆகியவை முக்கியமான பிரிவுகள். உலகின் மொத்த எரிமலைகளில் சுமார் 75% இந்த பசுபிக் பெருங்கடலைச் சுற்றிய பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதி அடிக்கடி நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகளை சந்திப்பதால் இது 'ரிங் ஆஃப் பயர்' என்றழைக்கப்படுகிறது.

பசுபிக் பெருங்கடலின் அடியில் சுமார் 40,000 மைல்கள் நீளத்திற்கு மலைத்தொடர் ஒன்று அமைந்துள்ளது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, புவித் தட்டுகள் நகர்வின் காரணமாக இந்தப் பெருங்கடல் ஆண்டுதோறும் சுருங்கி வருவதாகக் கூறப்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் உள்ள எந்த ஒரு புள்ளியில் இருந்தும் விண்வெளியின் தொடக்கம் என்று பொதுவாகக் கருதப்படும் கார்மன் கோட்டின் (Kármán line) உயரம் சுமார் 100 கிலோ மீட்டர்கள் ஆகும்.

Advertisment
Advertisements

பூமியின் மேற்பரப்பிலிருந்து துளையிட்டு எதிர் திசையில் (ஆப்போசிட் சைடு) வெளியேறினால் (பெரு அல்லது சிலிக்கு அருகில் தொடங்கி), நீங்க வெளியேறும் இடம் வியட்நாம் மற்றும் தைவானுக்கு நடுவே உள்ள பசுபிக் கடலாகத்தான் இருக்கும். இதுபோன்ற பல எதிர்ப்புற புள்ளிகள் (Antipodes) பசுபிக் பெருங்கடலுக்குள் உள்ளன. இந்தோனேசியா மற்றும் கொலம்பியாவுக்கு நடுவில் உள்ள கடல் வழி தூரம் சுமார் 20,000 கி.மீ. ஆகும், இது பூமியின் மொத்த சுற்றளவில் (40,000 கி.மீ.) 50% ஆகும்.

பசுபிக் பெருங்கடலில் மட்டும் சுமார் 710 மில்லியன் கியூபிக் கிலோமீட்டர் தண்ணீர் உள்ளது. இது உலகின் மொத்த கடல் நீரில் தோராயமாக 50% ஆகும். பூமியை 420 கி.மீ. உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பார்த்தால் கூட பசுபிக் பெருங்கடலை முழுமையாக ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. கூகுள் எர்த் (Google Earth)-இன் அதிகபட்ச ஜூம்-அவுட் புள்ளியில் கூட 95% பசுபிக் கடலை மட்டுமே பார்க்க முடியும்.

பசுபிக் பெருங்கடலில் உள்ள மாரியானா அகழியில் (Mariana Trench) இருக்கும் சேலஞ்சர் டீப் (Challenger Deep) தான் உலகின் மிக ஆழமான பகுதியாகும். இது மேற்பரப்பில் இருந்து 36,070 அடி (சுமார் 11 கி.மீ.) ஆழத்தில் உள்ளது. சேலஞ்சர் டீப் தவிர டோங்கா அகழி, பிலிப்பீன் அகழி மற்றும் குரில் கம்சட்கா அகழி போன்ற அகழிகளும் பசுபிக் பெருங்கடலில் சுமார் 10 கி.மீ.க்கும் அதிகமான ஆழத்தில் உள்ளன.

இதன் அடிப்பகுதியில் உள்ள டெக்டானிக் பிளேட்டுகள் நகர்வதால்தான் உலகில் பெரும்பாலான நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமிகள் ஏற்படுகின்றன. இந்த நகர்வுகளால் பசுபிக் பெருங்கடல் ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாகச் சுருங்கிக்கொண்டே வருவதாகவும், அதே வேகத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் விரிவடைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: