scorecardresearch

Lunar Eclipse 2023: மே 5 சந்திர கிரகணம்: ரத்த சிவப்பாக மாறும் நிலா; காரணம் என்ன?

Penumbral Lunar Eclipse 2023: இந்தியாவில் இன்று (மே 5) பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

Penumbral lunar eclipse on May 5
Penumbral lunar eclipse on May 5

Chandra Grahan 2023: How it happens | பொதுவாக, சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து சந்திர கிரகணம் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அரிய வகை ஹைபிரிட் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து இன்று (மே 5) பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சூரிய கிரகணம் இந்தியாவில் நிகழவில்லை என்றாலும் சந்திர கிரகணத்தை இந்தியாவிலும் காண முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சந்திர கிரகணங்கள் சூரிய கிரகணங்களைப் போல அரிதானவை அல்ல. நாசாவின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது இரண்டு முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை, பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன.

இது ஒவ்வொரு மாதமும் நடக்காததற்குக் காரணம், நமது கிரகத்தைச் சுற்றியுள்ள சந்திரனின் சுற்றுப்பாதையானது சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதையுடன் ஒப்பிடும்போது சாய்ந்துள்ளது. ஒவ்வொரு முறையும் சந்திரன் நமது கிரகத்தைச் சுற்றி ஒரு முழு சுற்றுப்பாதையை உருவாக்கும் போது அண்ட சீரமைப்பு நடக்காது என்பதே இதன் பொருள்.

சந்திர கிரகணம் எப்படி நிகழ்கிறது?

முழு நிலவின் போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். பூமியானது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் துல்லியமாக அமைந்திருக்கும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இது சந்திரனால் பிரதிபலிக்கும் சூரிய ஒளியை மங்கச் செய்கிறது அல்லது மறைக்கிறது. சில நேரங்களில், இந்த மங்கல் அல்லது தெளிவின்மை சந்திரனை சிறிது சிகப்பாக மாற்றும்.

சந்திர கிரகணத்தின் போது சந்திரன் ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது?

சில சந்திர கிரகணங்களின் போது, ​​பூமியின் நிழலால் மறைக்கப்பட்ட சந்திரனின் பகுதிகள் சிவப்பு நிறத்தை எடுக்கும். இது Rayleigh சிதறல் எனப்படும் ஒரு நிகழ்வின் காரணமாகும். முக்கியமாக, அந்தக் காலங்களில், நமது கிரகத்தின் வளிமண்டலத்தில் முதலில் செல்லும் சூரிய ஒளி மட்டுமே சந்திரனை அடையும். நமது வளிமண்டலம் ஒளியின் நீல அலைநீளங்களை சிதறடிப்பதால், ஒளி நிறமாலையின் சிவப்பு பகுதி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

பெனும்பிரல் கிரகணம் என்பதால் மே 5 கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறமாக மாற வாய்ப்பில்லை. மூன்று வெவ்வேறு வகையான சந்திர கிரகணங்கள் உள்ளன- Total, Partial and Penumbral.

பெனும்பிரல் சந்திர கிரகணம்

மே 5-ம் தேதி கிரகணம் என்பது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஆகும். பெனும்பிரல் கிரகணத்தின் போது, ​​சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான வெளிப்புற பகுதியான பெனும்பிராவின் வழியாக மட்டுமே பயணிக்கிறது. இதன் காரணமாக, சந்திரன் சிறிது சிறிதாக மங்கிவிடும், தொலைநோக்கி, பைனாக்குலர் போன்ற கருவி கொண்டு பார்த்தால் தெளிவாக காண முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: The penumbral lunar eclipse on may 5 and other eclipses how do they work