நிங்கலூ கிரகணம் (Ningaloo Eclipse) என்று அழைக்கப்படும் ஹைபிரிட் சூரிய கிரகணம் ஏப்ரல் 20-ம் தேதி நிகழ உள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இதை இந்தியாவில் காண முடியாது. நேரடி ஸ்ட்ரீம் மூலம் காணலாம்.
நிங்காலூ கிரகணம் ஹைபிரிட் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன், முழு கிரகணமாக மாறும் என்று கூறப்படுகிறது. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காது, அதற்கு பதிலாக, அது சூரியன் மீது ஒரு சிறிய இருண்ட வட்டு போல் தோன்றும், இது “நெருப்பு வளையம்” விளைவை உருவாகிறது.
முழு சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும். அதனால் இந்த கிரகணத்திற்கு ஆஸ்திரேலியாவின் “நிங்கலூ”நி கடற்கரை பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் இந்த கிரகணத்தை முழுமையாகவோ, பகுதியளவாகவோ பார்க்க முடியாது.
எந்த நேரத்தில் கிரகணம் ஏற்படும்?
மேற்கு ஆஸ்திரேலியாவின் அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு நகரத்தில் மட்டுமே முழு கிரகணம் தெரியும். Exmouth இலிருந்து பார்க்கும்போது, ஏப்ரல் 20-ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.34 முதல் 6.32 வரை கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்களுக்கு பகுதி சூரிய கிரகணம் ஏற்படும். இருப்பினும், அந்த நேரத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு 4.29 முதல்
4.30 வரை முழு கிரகணம் தெரியும்.
தென்கிழக்கு ஆசியா, கிழக்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இருந்தால் பகுதி அளவு கிரகணத்தை காண முடியும் என்று முன்னாள் நாசா வானியல் இயற்பியலாளரும் கிரகண நிபுணருமான பிரெட் எஸ்பெனாக் கூறுகிறார்.
முழு சூரிய கிரகணத்திற்கும், Annular Eclipse-க்கும் என்ன வித்தியாசம்?
முழு கிரகணத்தின் போது, சந்திரனுக்கும் நமது கிரகத்திற்கும் இடையில் பயணம் செய்யும் போது சூரியனை சந்திரன் முற்றிலும் மறைக்கும். அதாவது முழு கிரகணம் நிகழும் போது அதிகாலை அல்லது மாலை வேளையில் வானம் முற்றிலும் இருட்டாகிவிடும். முழு சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் தெரியும்.
வளைய கிரகணத்தின் போது சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்கிறது, ஆனால் அது முழு கிரகணத்திற்கு பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும். இதன் பொருள் சந்திரன் ஒரு பிரகாசமான வட்டில் ஒரு இருண்ட வட்டு அல்லது வேறுவிதமாகக் கூறினால், “நெருப்பு வளையம்” போல் தோன்றும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil