சூரியன் என்ற நட்சத்திரம் நமது சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ளது. கடும் வெப்பத்தை உள்ளடக்கியதாக உள்ளது. சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் தோன்றும் சூரியன் ஒளிரும் நட்சத்திரமாக உள்ளது. சூரியனின் வயது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் என நாசா தெரிவித்துள்ளது.
சூரியன் தொடர்ந்து சூரிய மண்டலத்திற்கு ஆற்றலை அனுப்பி வருகிறது. நமது சூரிய மண்டலத்தில் உள்ள மிகவும் பழமையான விஷயங்களைக் கண்டு சூரியனின் வயதை விஞ்ஞானிகள் கணித்துள்ளளனர் என்ற கூறப்படுகிறது.
சூரியனின் படத்தை பகிர்ந்து நாசா கூறுகையில். சூரியனின் ஈர்ப்பு, ஆற்றல் சூரிய மண்டலத்தை ஒன்றாக வைத்திருக்கிறது. மிகப்பெரிய கிரகங்கள் முதல் மிகப்பெரிய கிரகங்கள் முதல் வரை அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது என்று கூறியுள்ளது.
மேலும், சூரியனை சுற்றி கருப்பில் நிறத்தில் இருக்கிறது. சூரியன் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஒளிருகிறது. வெடிப்புகள் நட்சத்திரத்தின் விளிம்புகளைக் கண்டறிந்து, விண்வெளிக்கு பொருட்களை அனுப்புகின்றன. 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் மையத்துடன் சுமார் 1.4 மில்லியன் கிலோமீட்டர் உள்ளது. இது எப்போதும் போல மர்மமாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பல நாடுகள் சூரியனை ஆய்வை செய்துவருகின்றன. இந்த வரிசையில் இந்தியாவும் விரைவில் சூரியனை ஆய்வு செய்ய உள்ளது. சூரியனை ஆய்வு செய்ய இந்தியா ஆதித்யா எல் 1 திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ஆதித்யா L1 மிஷன் திட்டம் மூலம் இந்தாண்டு Lagrange point 1 (L1) க்கு விண்கலம் செலுத்தப்பட உள்ளது. ஆதித்யா L1 விண்கலம் இந்தாண்டு ஜுன் மாதம் விண்ணில் ஏவப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.