சென்னையில் இன்று 12.07 மணிக்கு நிழல் விழாது. சூரியன் நேரடியாக தலைக்கு மேலே விழுவதால், நிழல் உங்களுக்கு அடியில் சென்றுவிடும்.
சென்னை எலியட் கடற்கரைக்கு நேரில் வந்து இதுகுறித்து நீங்கள் மேலும் தெரிந்து கொள்ளலாம் என்று கணித அறிவியல் நிறுவனம் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.
ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய நிகழ்வு என்பது கூடுதல் சிறப்பு.
பூஜ்ஜிய நாள் என அழைக்கப்படுவது ஏன்?
நண்பகலில் மிகச்சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். அதாவது, செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்துவிடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது.
அந்த நாளைத்தான் ‘நிழலில்லா நாள்’. பூஜ்ஜிய நிழல் நாள் என்கிறோம்.
#ZeroShadowDay in #Chennai tomorrow! At 12:07pm, 24 April, the sun will be directly overhead and your shadow will be directly under you. Come observe #ZSD and learn more about shadow changes over the day/year/location and apparent sun movement: 11:30am-12:30pm, #ElliotsBeach. pic.twitter.com/RUyxXLtok8
— The Institute of Mathematical Sciences (@IMScChennai) April 23, 2022
இளநீர் முதல் எலுமிச்சை ஜூஸ் வரை… கோடையில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“