அமெரிக்கா, இந்தியா உள்பட பல உலக நாடுகள் தற்போது நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலவில் புதைந்திருக்கும் ரகசியத்தை உலகிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இதற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில் காற்றில்லாத நிலவில் ஆக்ஸிஜன் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் குழு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
நாசா விஞ்ஞானிகள் குழு காற்றில்லாத நிலவில் ஆக்ஸிஜன் இருப்பதை மீண்டும் உறுதி செய்துள்ளனர். ஏனெனில் அங்குள்ள மண்ணில் இருந்து உயிர்வாழ தேவையான தனிமத்தை கண்டறிந்ததன் அடிப்படையில் இதை கூறியுள்ளனர்.
ஜான்சன் விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள் வெற்றிட சூழலில் உருவகப்படுத்தப்பட்ட சந்திர மண்ணிலிருந்து ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்தனர். ஆய்வில் சந்திர வளங்களைப் பிரித்தெடுத்தும், அதை சோதித்தும் பார்த்தனர். இந்த ஆக்சிஜன்
சுவாசிக்க மட்டுமின்றி போக்குவரத்திற்கு எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Carbothermal Reduction Demonstration (CaRD), மூலம் ஆய்வு செய்யப்பட்டது. டர்ட்டி தெர்மல் வேக்யூம் சேம்பர் எனப்படும் 15-அடி விட்டம் கொண்ட ஒரு சிறப்பு கோள அறையைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“