தினமும் இந்த ஒரு எளிய பழக்கமே போதும்... மூளையை இளமையாக வைத்திருக்க நிபுணர்கள் பரிந்துரைக்கும் பயிற்சி!

புத்தக வாசிப்பு மூளையில் புதிய நரம்புப் பாதைகளை உருவாக்குகிறது. புனைகதைகள் மற்றவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்கின்றன; அறிவார்ந்த நூல்கள் விமர்சனச் சிந்தனையை பலப்படுத்துகின்றன.

புத்தக வாசிப்பு மூளையில் புதிய நரம்புப் பாதைகளை உருவாக்குகிறது. புனைகதைகள் மற்றவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்கின்றன; அறிவார்ந்த நூல்கள் விமர்சனச் சிந்தனையை பலப்படுத்துகின்றன.

author-image
WebDesk
New Update
brain young for decades

தினமும் இந்த ஒரு எளிய பழக்கமே போதும்... மூளையை இளமையாக வைத்திருக்க நிபுணர்கள் பரிந்துரைக்கும் பயிற்சி!

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் என்பதால், வாசிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. உலகளாவிய ஆய்வுகள் புத்தக வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவதாகக் காட்டினாலும், வாசிப்பு என்பது இன்பமான செயல் மட்டுமல்ல, அது நமது மூளையை வடிவமைக்கக்கூடிய ஒரு அறிவாற்றல் பயிற்சி என்றும் விஞ்ஞானம் தொடர்ந்து நிரூபிக்கிறது.

Advertisment

புதிய நரம்புப் பாதைகளை உருவாக்கும் புத்தகங்கள் 

பாரீஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சி உளவியல் மற்றும் அறிவாற்றல் நரம்பியல் பேராசிரியர் க்ரெகோயர் போர்ஸ்ட் (Grégoire Borst) பிரான்ஸ் 24 ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், வாசிப்பு நமது மூளையில் புதிய தகவல் செயலாக்கப் பாதைகளை உருவாக்குவதாகக் கூறினார். தினமும் வெறும் 10 நிமிடங்கள் படிப்பது கூட சிந்தனையைத் தீட்டவும், நினைவாற்றலை மேம்படுத்தவும், அறிவாற்றல் சிதைவில் இருந்து பாதுகாக்கவும் உதவும் என்கிறார் அவர்.

புனைகதை (Fiction) வாசிப்பு: புனைகதைகளைப் படிப்பது, மற்றவர்களின் உணர்ச்சிகளையும் கண்ணோட்டங்களையும் புரிந்துகொள்ளும் நமது திறனைப் பயிற்றுவிக்கிறது. உளவியலாளர்கள் இதை 'மனதின் கோட்பாடு' (Theory of Mind) என்றழைக்கின்றனர். "வாசிப்பு தனிமையான செயல் என்றாலும், அதன் பலன்கள் சமூக ரீதியானவை. இது மனிதர்கள் இடையேயான அர்த்தமுள்ள தொடர்புக்கு அவசியமான மன நிலைகள், நோக்கங்கள் மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது" என்று போர்ஸ்ட் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

புனைகதை அல்லாத (Non-fiction) வாசிப்பு: அறிவார்ந்த புத்தகங்களைப் படிப்பது நமது அறிவின் தளத்தை விரிவுபடுத்துகிறது மற்றும் விமர்சனச் சிந்தனையை (Critical Thinking) பலப்படுத்துகிறது. நீங்க அதிகம் படிக்க படிக்க, தகவல்களை கேள்வி கேட்கவும், உங்களை சுற்றியுள்ள உலகத்தை பகுப்பாய்வு செய்யவும் சிறப்பாகத் தயாராகிறீர்கள் என்றார் அவர். நாவல்களாக இருந்தாலும், வாழ்க்கை வரலாறுகளாக இருந்தாலும், இரண்டையும் கலந்து படிப்பது சிறந்த பலன்களைத் தரும் என்று அவர் வலியுறுத்தினார்.

Advertisment
Advertisements

வாசிப்பு ஏன் தனித்துவமானது என்பதை விளக்கிய போர்ஸ்ட், நாம் படிக்கும்போது கதாபாத்திரங்கள், காட்சிகள் மற்றும் உணர்ச்சிகளின் மனப் படங்களை உருவாக்குகிறோம் என்றார். கதாபாத்திரங்கள் இடையேயான தொடர்புகளையும், அவர்களின் நோக்கங்களையும் நீங்க கற்பனை செய்கிறீர்கள். இந்த மனப் பயிற்சி, நிஜ வாழ்க்கையில் மற்றவர்களுடன் அனுதாபப்படவோ அல்லது அவர்களின் கண்ணோட்டத்தை எடுக்கவோ முயற்சிக்கும்போது நாம் செய்வதை ஒத்திருக்கிறது என்று அவர் விளக்கினார். இந்தக் காட்சிப்படுத்தல் செயல்முறை, கற்பனை, பச்சாதாபம் (Empathy) மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறை தொடர்பான நரம்பு சுற்றுகளை பலப்படுத்துகிறது. வாசிப்பு மறதி நோயிலிருந்து (Dementia) பாதுகாக்க உதவுவதாக வரும் தகவல்களில் உண்மை உள்ளது என்பதை போர்ஸ்ட் ஏற்றுக்கொண்டார்.

அறிவாற்றல் ரீதியாக ஈடுபாட்டுடன் கூடிய எந்தச் செயலும் மறதி நோய் அபாயத்தைக் குறைக்க உதவும். வாசிப்பு சிறந்தது, ஏனெனில் அது ஒரே நேரத்தில் கவனம், நினைவகம், பகுத்தறிவு மற்றும் மொழி என பல அறிவாற்றல் வளங்களை ஈடுபடுத்துகிறது. படிப்பது நமது செயல்பாட்டு நினைவகத்தை (Working Memory) பலப்படுத்துகிறது என்றும் அவர் விளக்கினார்.

ஒரு பக்கத்தின் தொடக்கத்தில் பார்த்த விஷயத்தை அதன் முடிவில் தோன்றுவதுடன் இணைக்கும்போது, நூற்றுக்கணக்கான பக்கங்களில் இந்தப் பயிற்சியைச் செய்வது செயல்பாட்டு நினைவகத்தைப் பயிற்றுவிக்கிறது. செயல்பாட்டு நினைவகம் என்பது பள்ளி, வேலை மற்றும் வாழ்க்கை முழுவதும் வெற்றிக்கான வலுவான முன்னறிவிப்புகளில் ஒன்றாகும் என்றார் அவர். மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது, எந்த ஒரு ஒற்றை 'மூளை விளையாட்டு'களை விடவும் மிக முக்கியமானது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

எவ்வளவு படிக்க வேண்டும்?

கவனச் சிதறல் அதிகரித்து வரும் நிலையில், எவ்வளவு வாசிப்பு போதுமானது என்ற கேள்விக்கு, "ஒரு புத்தகம் கூட இல்லாததை விட நல்லது" என்று போர்ஸ்ட் நகைச்சுவையாகக் கூறினார். பெரியவர்களுக்கு சிறிய, நிலையான பழக்கவழக்கங்கள் கூட பலனளிக்கும். ஒரு நாளைக்கு 10நிமிடங்கள் படிப்பது கூடப் பயனுள்ளது என்று அவர் கூறினார். வாசிப்பு, நமது கவனம் மற்றும் கற்பனைக்கு சவால் விடுக்கும் ஒன்றாக இருக்க வேண்டும், வெறும் ஸ்க்ரோலிங் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதாக இருக்கக்கூடாது.

குழந்தைகளுக்கு கதை கேட்பது அவர்களின் மொழி வளர்ச்சிக்கு முக்கியமானது. இது, சொல்லகராதி அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. ஒரு குழந்தையின் மொழி அடித்தளம் எவ்வளவு வலுவாக இருக்கிறதோ, அவ்வளவு சிறப்பாக அவர்கள் வாசிக்கக் கற்றுக்கொள்வார்கள். குழந்தைகள் ஒரே கதையை மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவது அவர்களின் மூளையைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு வழியாகும்.

புத்தகம் Vs டிஜிட்டல் ஸ்கிரீன்(Screen)

டிஜிட்டல் புத்தகங்கள் காகிதப் புத்தகங்களைப் போலவே நல்லதா என்ற கேள்விக்கு போர்ஸ்ட், "சரியாக இல்லை" என்று பதிலளித்தார்.

காகிதப் புத்தகங்கள் ஸ்பெஷல் தகவல்களை (Spatial Information) வழங்குகின்றன. ஒரு கதையில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதைப் பக்கங்களின் எடை மற்றும் தடிமன் மூலம் அறியலாம். இந்தப் பௌதீகத் தன்மை நினைவகம் உருவாவதற்கு உதவுகிறது. "பத்திகள், பக்க எண்கள் மற்றும் ஒரு பக்கத்தில் உரை தோன்றும் இடம் ஆகியவை உங்கள் மூளைக்குத் துப்பு கொடுக்கின்றன. அவை நினைவுகூரலுக்கு உதவும் மன அடையாளங்களாக செயல்படுகின்றன" என்றார் அவர்.

டிஜிட்டல் ஸ்கிரீன்கள்: சீரான ஸ்கிரீன்களில் ஸ்க்ரோல் செய்வது அந்த ஸ்பெஷல் அடையாளத்தை நீக்குகிறது, இதனால் விவரங்களைத் தக்கவைத்துக் கொள்வது கடினமாகிறது என்று அவர் கூறினார். ஒரு நாவலைப் படிப்பதற்குப் பதிலாக ஸ்மார்ட்போனை எடுக்க நினைத்தால், உங்க மூளைக்கு நன்றி சொல்லுங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாசிப்பு நமது கற்பனையை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், நாம் யார் என்பதற்கான நரம்பு அடித்தளத்தை ஒரு நேரத்தில் ஒரு பக்கமாக பலப்படுத்துகிறது.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: