/indian-express-tamil/media/media_files/nc71923i91D4QHF2aD9B.jpg)
ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இயற்பியலுக்கான பரிசை அறிவித்துள்ளது.
Nobel Prize in Physics : பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகள் பியர் அகோஸ்டினி (Pierre Agostini), பெரென்ஸ் கிரவுஸ் Ferenc Krausz மற்றும் Anne L'Huillier (அன்னே எல்'ஹுல்லியர்) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இயற்பியலுக்கான பரிசை அறிவித்துள்ளது.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 3, 2023
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2023 #NobelPrize in Physics to Pierre Agostini, Ferenc Krausz and Anne L’Huillier “for experimental methods that generate attosecond pulses of light for the study of electron dynamics in matter.” pic.twitter.com/6sPjl1FFzv
கோவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான கண்டுபிடிப்புகளுக்காக 2023 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசை முறையே ஹங்கேரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோர் வென்ற ஒரு நாளுக்குப் பிறகு இயற்பியல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Three scientists win Nobel Prize in Physics for work on electrons
கடந்த ஆண்டு மூன்று விஞ்ஞானிகள் அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எஃப் கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகியோர் குவாண்டம் தகவல் அறிவியலில் தங்கள் பணிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தப் பரிசுகள் ஆல்ஃபிரட் நோபல் விட்டுச்சென்ற உயிலில் இருந்து பெறப்பட்ட 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் ($1 மில்லியன்) ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.