ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹா'பாய் எரிமலை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெடித்தது. வரலாற்றில், இதுவரை பதிவு செய்யப்பட்டதில் மிகப்பெரிய வளிமண்டல வெடிப்பை இது உருவாக்கியது.
இந்த வெடிப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது, மேல் வளிமண்டலத்தில் சாம்பல் நிற புகைமண்டலத்தை உருவாக்கியது. நவீன சகாப்தத்தில் இதுதான் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்வு என்று புதிய ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது.
நேச்சரில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு, விரிவான செயற்கைக்கோள் தரவை அடிமட்ட அவதானிப்புகளுடன் இணைத்து, இந்த வெடிப்பானது’ அதன் அளவு, வேகம், வேகமாக நகரும் ஈர்ப்பு (fast-moving gravity) மற்றும் வளிமண்டல அலைகளின் வரம்பில் தனித்துவமானது என்பதைக் காட்டுகிறது.
2021 டிசம்பரில் தொடங்கிய சிறிய நிகழ்வுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி, ஹங்கா டோங்கா எரிமலை வெடித்தது, அப்போது பூமியின் மேற்பரப்பிலிருந்து 50 கிலோமீட்டர்களுக்கு மேல், விரிந்திருக்கும் செங்குத்துச் சாம்பலை உருவாக்கியது. நீரிலிருந்து வெளியாகும் வெப்பமும், புகைப்படலத்தில் உள்ள சூடான சாம்பலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு பூமியில் ஈர்ப்பு அலைகளின் மிகப்பெரிய ஆதாரமாக இருந்தது. செயற்கைக்கோள் அவதானிப்புகளின்படி, பசிபிக் படுகை முழுவதும் பரவிய சிற்றலை போன்ற ஈர்ப்பு அலைகளையும் இது உருவாக்கியது.
இந்த எரிமலை’ வளிமண்டல அலைகளைத் தூண்டியது, இது கிரகம் முழுவதும் குறைந்தது ஆறு முறை எதிரொலித்தது, மேலும் வினாடிக்கு 320 மீட்டர் என அத்தகைய அலைகளுக்கான அதிகபட்ச வேகத்தை அடைந்தது, இது நமது வளிமண்டலத்தில் இதுவரை காணப்படாத வேகம்.
இந்த அலைகளும் விண்வெளியின் விளிம்பை அடைந்தன. இவ்வளவு பெரிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிகழ்வு, ஆய்வறிக்கையின் ஆசிரியர்களால், அவதானிப்புப் பதிவில் தனித்துவமானது என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் அவதானிப்புகள் எதிர்கால வளிமண்டல வானிலை மற்றும் காலநிலை மாதிரிகளை மேம்படுத்த விஞ்ஞானிகளுக்கு உதவும்.
இந்த ஆண்டு மே மாதம், நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் எரிமலை நிபுணரான ஷேன் க்ரோனின், ஆராய்ச்சியாளர்கள் குழுவை வழிநடத்தி, எரிமலையின் கால்டெராவின் மீது பயணம் செய்தார், இது ஒரு எரிமலை வெடிக்கும் போது உருவாகும் மத்திய தாழ்வு நிலை ஆகும்.
கால்டெராவின் கட்டமைப்பை வரைபடமாக்க அவர்கள் சோனாரைப் (sonar) பயன்படுத்தினர், மேலும் 4 கி.மீட்டர் அகலமுள்ள தாழ்வு நிலை, கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டருக்கும் குறைவான ஆழத்திலிருந்து 850 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்ததைக் கண்டறிந்தனர்.
க்ரோனின் கூற்றுப்படி, இந்த பெரிய வெடிப்புக்கான காரணம், வெடிப்பு தொடங்கியவுடன் பெரிய அளவிலான மாக்மா மற்றும் தண்ணீருக்கு இடையேயான தொடர்பாக இருக்கலாம்.
20 டிகிரி செல்சியஸ் தண்ணீரும், சுமார் 1,100 டிகிரி செல்சியஸ் மாக்மாவுக்கும் இடையே பெரிய வெப்பநிலை வேறுபாடு இருக்கிறது, இப்படி ஒரு சூழலில் அவை இரண்டும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயத்தில், வெடிப்பு ஏற்படுகிறது.
இதைப் போலவே, ஒவ்வொரு தொடர்பும் தண்ணீரை’ மாக்மாவின் விளிம்புகளுக்குள் ஆழமாகத் தள்ளி, தொடர்பின் பரப்பை அதிகரித்து, செயின் ரியாக்ஷ்னில் மேலும் வெடிப்புகளை உண்டாக்கும்.
கால்டெராவின் ஆரம்ப ஆழம் போதுமான அளவு குறைவாக இருந்தது, எனவே நீர் அழுத்தம் வெடிப்பை அடக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில், மாக்மாவுக்கு சக்தி வாய்ந்த வெடிப்புகளுக்கு அதிக அளவு தண்ணீர் கொடுக்கப்பட்டது, இதன் விளைவாக ஒவ்வொரு நிமிடமும் பல பெரிய வெடிப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய வெடிப்புகள் ஏற்படுகின்றன.
எரிமலை வெடித்த நாளில், நிகழ்வு நடந்த இடத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் "பீரங்கித் தாக்குதல் போன்ற சத்தம்" கேட்டதாக, நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்ததாக குரோனின் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.