ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தை நாசா வெற்றிகரமாக செய்தது. ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் ஆளில்லா ஓரியன் விண்கலம் மற்றும் விண்வெளி ஏவுதள அமைப்பு (எஸ்.எல்.எஸ்) ராக்கெட்டை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பியது.
Advertisment
இதைத் தொடர்ந்து நிலவு சுற்றுப்பாதைக்கு மனிதர்களை அனுப்ப ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்கு நாசா தயாராகி வருகிறது. இது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் முதல் Crewd Mission ஆகும். இந்தநிலையில் ஆர்ட்டெமிஸ் 2 விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி தொடக்கப்பட்டுள்ளது என நாசா அறிவித்துள்ளது.
நாசா தனது இன்ஸ்டாகிராம் வெளிளிட்டுள்ள அறிவிப்பில், "ஆர்ட்டெமிஸ் 2 விண்வெளி வீரர்களுக்கான 18 மாத கால பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் ஓரியன் விண்கலம் மற்றும் விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் பற்றி விரிவாக கற்றுக் கொள்வார்கள்.
இதன் மூலம் தான் அவர்கள் நிலவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த அமைப்பை இயக்கவும் கண்காணிக்கவும் கற்றுக்கொள்வார்கள், பயணத்தின் ஏற்றம், சுற்றுப்பாதை, கடற்கரை, நுழைவு கட்டங்கள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படுவது என அனைத்தையும் கற்றுக் கொள்வர்" எனத் தெரிவித்துள்ளது.
நாசாவின் கூற்றுப்படி, ஆர்ட்டெமிஸ் II இல் நான்கு விண்வெளி வீரர்கள் சந்திரனைச் சுற்றிச் செல்வார்கள், இது ஆர்ட்டெமிஸ் மூலம் நிலவில் அறிவியல் மற்றும் ஆய்வுக்காக நீண்ட கால இருப்பை நிறுவுவதற்கான நாசாவின் பாதையில் முதல் குழு பணியாகும். 4 விண்வெளி வீரர்கள் - ரீட் வைஸ்மேன் ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்கு கமெண்டராக செயல்படுவார். விக்டர் குளோவர்- பைலட், கிறிஸ்டினா ஹம்மாக் கோச்- மிஷன் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஜெர்மி ஹேன்சன்- மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஆக செயல்படுவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“