அடுத்த பூமி இதுதானா? வளிமண்டலம் கொண்ட புதிய கோளைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்!

TRAPPIST-1e என்ற புதிய கோளை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கோளில் பூமியைப் போன்ற 2-ம் நிலை வளிமண்டலம் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதால், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

TRAPPIST-1e என்ற புதிய கோளை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கோளில் பூமியைப் போன்ற 2-ம் நிலை வளிமண்டலம் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதால், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

author-image
WebDesk
New Update
TRAPPIST-1e

அடுத்த பூமி இதுதானா? வளிமண்டலம் கொண்ட புதிய கோளைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்!

பூமிக்கு வெளியே உயிரினங்கள் வாழ முடியுமா? இந்த கேள்விக்கு விடை தேடிவந்த விஞ்ஞானிகளுக்கு, இப்போது புதிய கோள் மூலம் நம்பிக்கை பிறந்துள்ளது. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக் கழக ஆய்வாளர்கள், நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஒரு கோளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தக் கோள், பூமியைப் போலவே 2-ம் நிலை வளிமண்டலம் கொண்டிருக்கலாம் என்றும், அதன் மேற்பரப்பில் திரவ நீர் இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது உண்மையென்றால், அங்கே உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்!

எங்கே இருக்கிறது இந்தக் கோள்?

Advertisment

இந்த மர்மமான கோள், TRAPPIST-1 என்ற நட்சத்திர மண்டலத்தில் இருக்கிறது. நமது சூரியனை விட மிகச்சிறிய இந்த நட்சத்திர அமைப்பில் மொத்தம் 7 கோள்கள் உள்ளன. பூமியிலிருந்து சுமார் 40 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. 2016-ம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த மண்டலம், உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த 'கோல்டிலாக்ஸ் மண்டலத்தில்' (Goldilocks Zone) அமைந்துள்ளது. 2016-ம் ஆண்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

நட்சத்திரத்தை சுற்றி உயிர்கள் வாழ்வதற்கு உகந்த பகுதியான 'கோல்டிலாக்ஸ் மண்டலத்தில்' (Goldilocks zone) அமைந்துள்ளதால், விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆரம்பத்தில், இந்த மண்டலத்தில் உள்ள 3 கோள்களில் 2 கோள்களுக்கு வளிமண்டலம் இல்லை என்பது தெரியவந்ததால், உயிரினங்கள் இருப்பதற்கான ஆர்வம் குறைந்திருந்தது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

கார்னெல் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் நிக்கோல் லூயிஸ் இதுபற்றி கூறுகையில், "TRAPPIST-1 என்பது நமது சூரியனில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு நட்சத்திரம். எனவே, அதைச் சுற்றியுள்ள கோள் மண்டலமும் வேறுபட்டது. இது எங்கள் ஆய்வு மற்றும் கோட்பாட்டு ரீதியான அனுமானங்களுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

பூமியைப் போன்றதா அதன் வளிமண்டலம்?

Advertisment
Advertisements

ஆய்வுகளின்படி, இந்தக் கோளின் வளிமண்டலம், நமது பூமியின் வளிமண்டலத்தைப் போலவே நைட்ரஜன் மற்றும் மீத்தேன் போன்ற வாயுக்களால் ஆனதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அங்கே திரவ நீர் இருந்தால், அது பசுமைக்குடில் விளைவுடன் சேர்ந்து காணப்படும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

எனினும், இது ஒரு தொடக்கம் மட்டும்தான்! இந்த கோளின் வளிமண்டலத்தை மேலும் உறுதிப்படுத்த, அடுத்த ஓராண்டில் இன்னும் 15 முறை ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். எனவே, பூமிக்கு வெளியே ஒரு புதிய உலகத்தைக் கண்டறியும் நமது பயணம், இப்போதுதான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: